உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகளாவிய அமைதிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்; பிரதமர் மோடி

உலகளாவிய அமைதிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்; பிரதமர் மோடி

புதுடில்லி: ''உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக வந்துள்ளார். டில்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா வரவேற்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dphouzxq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: அதிபர் போரிக் இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்துள்ளார். இந்தியாவுடனான நட்பு மற்றும் உறவுகளை வலுப்படுத்த அவர் விரும்புகிறார். கனிமத்துறையில் உறவை வலுப்படுத்த விவாதம் நடத்தினோம். டிஜிட்டல், பொது உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரயில்வே, விண்வெளி மற்றும் பிற துறைகளில் சிலியுடன் இந்தியா இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது. போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளின் இடையே உறவை வலுப்படுத்த வேண்டும். உலகளாவிய ரீதியில், அனைத்து பதட்டங்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியாவும், சிலியும் ஒப்புக்கொள்கின்றன. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் பங்கு அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஏப் 02, 2025 07:39

சீக்கிரம் சிலிக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி.


மனிதன்
ஏப் 01, 2025 22:10

உலகளாவிய அமைதிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் பிரதமர் மோடி...ஆனால் உள்ளூர் அமைதிக்கு????


K.n. Dhasarathan
ஏப் 01, 2025 21:23

உலகளாவிய அமைதி இருக்கட்டும் ஐயா, முதலில் மணிப்பூர், காஸ்மீரில் எப்போது அமைதி வரும் ? உள்துறை அமைச்சர் என்ன செய்கிறார் ? ஏதாவது நடவடிக்கை உண்டா இல்லையா ?நீங்கள் செய்யமுடியவில்லை யா ? அடுத்து எத்தனையோ பேர் திறமையான ஆட்கள் இருக்கிறார்கள், யாரையாவது போடக்கூட முடியலையா ?


Priyan Vadanad
ஏப் 01, 2025 21:01

நல்லது சொல்வது நல்லபடியாய் நடக்கட்டும்.


V Ramanathan
ஏப் 01, 2025 15:59

"முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது" என்பதை ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின என்றல்லவா எழுதி இருக்க வேண்டும்? தயை கூர்ந்து தமிழைச் சரி பார்த்து அச்சிட வேண்டுகிறேன். பலமுறை பன்மை பெயர்சொல்லிற்கு ஒருமை வினைச்சொல் தினமலரில் பார்க்கிறேன்.