உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலித்துகளின் நீதிக்காக போராடுவோம்: சொல்கிறார் காங் எம்பி ராகுல்

தலித்துகளின் நீதிக்காக போராடுவோம்: சொல்கிறார் காங் எம்பி ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: ''நாட்டில் தலித்துகளுக்கு எதிராக எங்கு அட்டூழியங்கள் நடந்தாலும், அவர்களுக்கு நீதி கிடைக்க போராடுவோம்'' என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார்.அக்டோபர் 2ம் தேதி உ.பி.,யில் உள்ள ரேபரேலியில் அடித்துக் கொல்லப்பட்ட தலித் இளைஞர் ஹரியோம் வால்மீகியின் குடும்பத்தினரை ராகுல் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு ஒரு தலித் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். நான் அங்கு சென்றேன், இன்று நான் இங்கு வந்துள்ளேன். இறந்தவரின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களிடம் பேசினேன்.அவர்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்துள்ளது. அவர்கள் குற்றவாளிகள் போல் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.அவர்கள் கேட்பது நீதி மட்டுமே. எங்கள் மகன் கொல்லப்பட்டான். கொலை வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நீதி கேட்கிறோம் என தெரிவித்தனர். நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக அட்டூழியங்கள், கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன.அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று நான் முதல்வரிடம் கேட்க விரும்புகிறேன். அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். அவர்களை பாதுகாக்க முயற்சி செய்ய கூடாது. காங்கிரஸ் கட்சியும், நானும் குடும்பத்திற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சிப்போம். நாட்டில் தலித்துகளுக்கு எதிராக எங்கு அட்டூழியங்கள் நடந்தாலும், காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும். நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்குவோம். அவர்களின் நீதிக்காகப் போராடுவோம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

sankar
அக் 26, 2025 18:15

சோ வேங்கை வயலில் இருந்து உங்கள் வேலையே துவக்குங்க சார்


lana
அக் 17, 2025 20:36

ஏம்ப்பா உங்க கட்சி இல் தலைவர் ன்னு போர்டு மாட்டி கொண்டு ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு முதலில் தலைவர் பதவி க்கான மரியாதை மற்றும் பொறுப்பு கொடுங்க. அப்புறம் மற்றவர்கள் க்கு கொடுக்கலாம்


சகுரா
அக் 17, 2025 20:18

யாருக்கு அநீதி நடந்தாலும் நாங்கள் குரல் கொடுப்போம் என்று சொன்னால் தலைவர் பண்பு உள்ளது எனக் கூறலாம். தலித்துகளுக்கு நடந்தால் என்று கூறினால் அது பிரித்தாளும் சூழ்ச்சி.


GoK
அக் 17, 2025 19:20

இவன் குடும்பத்திலிருந்து மூணு பிரதமர்கள் இன்னும் ஓன்னு பினாமி பிரதமர் ஆக மொத்தம் நாலு ...எழுபத்து அஞ்சு வருஷத்திலே கிட்டத்தட்ட அம்பது வருஷம் இவங்க கிட்டத்தான் ஆட்சி ..என்னத்த புடிங்கினானுங்க ..இப்போ சொல்றார் நியாயம் கொடுப்பாராமாம் ?


Kulandai kannan
அக் 17, 2025 19:13

எதை தின்றால் பித்தம் தெளியும்?


C.SRIRAM
அக் 17, 2025 18:33

எங்கிருந்து ?. நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்தில் இருந்தா ?


Rathna
அக் 17, 2025 16:43

இறந்த பிணத்தின் மீது அரசியல் செய்யும் கூட்டம் இந்தியாவில் அதிகம் உள்ளது. வெட்க கேடு.


srinivasan
அக் 17, 2025 16:38

ஐயா., ராகுல்ஜி நீங்க இந்தியாவை விட்டு இத்தாலியில் குடியேறினாலே இந்திய மக்கள் ஒன்றாவார்கள் இந்தியாவும் முன்னேறும்


Nanchilguru
அக் 17, 2025 15:53

இவரு கூட போராட நம்ம ஆள் ஒருத்தரு வருவாரு


theruvasagan
அக் 17, 2025 15:45

இந்த டிராமா ஸ்கிரிப்ட் அரதப்பழசு. சுத்தமா எடுபடாது. சரி. வேங்கைவயலுக்கு ஒரு நடை வந்துட்டு போறது. ஆனா வரமாட்டிங்க. பிஜேபி ஆளும் மாநிலங்களில்தான் உங்கள் கரிசனத்தை காட்டுவீங்களோ.


முக்கிய வீடியோ