உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீங்கு இழைப்போரை பாதிக்கப்பட்டோருக்கு இணையாக ஒருபோதும் கருத மாட்டோம்

தீங்கு இழைப்போரை பாதிக்கப்பட்டோருக்கு இணையாக ஒருபோதும் கருத மாட்டோம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: “தீங்கு இழைப்போரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையாக கருதுவதை இந்தியா ஒருபோதும் ஏற்காது,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று டில்லி வந்தார்.அவரை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்று, பேச்சு நடத்தினார். அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரிட்டன் அரசுக்கு நன்றி. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் போராடும். தீங்கு இழைப்போரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையாக கருதுவதை இந்தியா ஒருபோதும் ஏற்காது.இந்தியா - பிரிட்டன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் என்பது மைல்கல்லாக கருதுகிறோம். இது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உதவும். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர், தொலைத்தொடர்பு, பயோடெக் போன்ற துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி கூறுகையில், “புதிய தொழில்நுட்பத்தை வளர்ப்பது, காலநிலை நெருக்கடியை சமாளித்தல், மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்றவற்றில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம்,” என்றார்.பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி, நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு கடந்த மாதம் சென்றார். அங்கு, இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
ஜூன் 08, 2025 18:49

அமெரிக்காவும், இங்கிலாந்தும்,பாகிஸ்தானுக்கு பிளேன் முதல் குண்டு வரை தருவார்களாம் .பாகிஸ்தானுக்கு பலவிதத்தில் உதவி செய்வார்களாம் ஆனால் இந்தியாவின் நண்பர்கள் போல நடிப்பார்களாம். இதற்கு ஒரே செயல் நமது மத்திய மாநில அரசாங்கம் செய்யவேண்டியது இது தான் - அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உண்ணும் மற்றும் பலவித பொருட்களுக்கும் இறக்குமதி வரி 50 சதவிகிதம் வரையில் விதிக்க வேண்டும். அப்போது தான் இந்த டொனால்ட் டிரம்ப் அடங்கும்.


Padmasridharan
ஜூன் 08, 2025 09:25

தீங்கு இழைப்போரில், இலஞ்சம் வாங்கும் கரை படிந்த இந்திய அரசதிகாரிகளும் இதில் அடங்குவார்களா. . இதயும் சரி செய்யுங்க சாமி. .


SRINATH
ஜூன் 08, 2025 08:56

Britain , US play divide and rule politics. UK signed FTA with India. We must carefully watch them . It should not become one sided. Similarly US is seeking PAK minerals and alleged BITCOIN support. US relationships are commercial oriented and we better become self reliant. India was invited to G7 because of necessity.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 08, 2025 08:20

சரியாக சொல்லியுள்ளீர்


மூர்க்கன்
ஜூன் 08, 2025 09:08

ஊழை உதாரு?? நம்ம சங்கரு??


Kasimani Baskaran
ஜூன் 08, 2025 07:31

சுதந்திரம் வாங்கியதில் இருந்து அரை நூற்றாண்டு காலமாக அணிசேராத கொள்கை என்று ஒன்றை வைத்துக்கொண்டு உருட்டித்திரிந்தது இந்தியா. இன்று தனக்கென்று ஒரு நிலைப்பாட்டை எடுத்து சரித்திரம் படைக்கலாம் என்று நினைக்கிறது. அதற்கான கடும் உழைப்பையும் கூட பாஜக அரசு கடந்த 11 ஆண்டுகளாக போட்டிருக்கிறது. பொருளாதாரம் மற்றும் இராணுவ சுயசார்பு. இரண்டிலும் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறது. இதன் பலனை இந்தியா அனுபவிக்க வேண்டும் என்றால் உள் எதிரிகளை ஒழித்துக்கட்டவும் வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 08, 2025 08:21

உள்நாட்டு எதிரிகள் அதாவது காட்டிக்கொடுப்போர் கையில் வோட்டு என்ற ஆயுதம் வைத்துள்ளனர்


Nathan
ஜூன் 08, 2025 05:57

ஆனால் அமெரிக்கா இந்தியாவை எதிரியாகவே பார்க்க ஆசை போலயே சார். அமெரிக்காவை நீங்கள் ஒருபோதும் நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம் . அமெரிக்கா Quad. அமைப்பை உருவாக்கியதே ஆயுதங்களை விற்பனை செய்து லாபம் பார்க்க தானோ. அமெரிக்க தந்திரத்தில் சிக்கி அவர்களிடம் நமது நாட்டின் பொருளாதாரத்தையோ தன்மானத்தையோ இழந்து விடக்கூடாது


மூர்க்கன்
ஜூன் 08, 2025 09:09

இழந்தாச்சு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை