உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைப்பா? விசாரணைக்கு உத்தரவு

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைப்பா? விசாரணைக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, மஞ்சுநாதா கோவிலின் முன்னாள் ஊழியர் அளித்த புகார் குறித்து விசாரிக்க, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்து உள்ளது. கர்நாடகாவின் கடலோர மாவட்டமான, தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி தாலுகா, தர்மஸ்தலாவில், பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோவில் உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6on3aw0h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இங்கு, 21 ஆண்டுகளுக்கு முன் ஊழியராக வேலை செய்த பீமா என்பவர், கடந்த 4ம் தேதி தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், '1998ம் ஆண்டு முதல் 2004 வரை, மஞ்சுநாதா கோவிலில் துாய்மை பணியாளராக வேலை செய்தேன். இந்த காலகட்டத்தில் கோவிலின் அருகில் ஓடும், நேத்ராவதி ஆற்றங்கரையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி புதைத்தேன்' என, கூறியிருந்தார்.சி.பி.ஐ.,யில் பணியாற்றி ஓய்வு பெற்ற, பெங்களூரை சேர்ந்த சுஜாதா பட் என்ற பெண்மணியும், '2003ல் தர்மஸ்தலா சென்ற எனது மகள் அனன்யா பட்டை காணவில்லை. 'அவரை கொன்று புதைத்து இருக்கலாம்' என, தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில், சில தினங்களுக்கு முன் புகார் அளிக்க, இந்த விவகாரம் சூடு பிடித்தது.

பிற மாவட்டங்கள்

இந்நிலையில், கர்நாடக அரசின் உள்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் தர்மஸ்தலாவில் நடந்ததாக கூறப்படும் பெண்கள் மற்றும் மாணவியரின் இயற்கைக்கு மாறான மரணங்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்து உள்ளது. தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, தர்மஸ்தலா சென்று பெண்கள், மாணவியர் காணாமல் போனதாக மாநிலத்தின் பிற மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், இனி பதிவு செய்யப்பட உள்ள வழக்குகளையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும்.விசாரணை குழுவின் தலைவராக, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி செயல்படுவார். குழுவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான ஆள்சேர்ப்பு பிரிவு டி.ஐ.ஜி., அனுசேத், பெங்களூரு நகர ஆயுதப்படை டி.சி., சவும்யலதா, உடுப்பி நக்சல் தடுப்பு படை எஸ்.பி., ஜிதேந்திர குமார் தயமா ஆகியோர் இருப்பர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 21, 2025 06:17

கருநாடக கருணா சித்துவின் விளையாட்டு இது என்றும் பேசுகிறார்கள் அதனையும் எழுதுங்க ? 5000 கோடி ரூபாய் கேட்டதாகவும் கொடுக்காததால் இந்த விளையாட்டு


karupanasamy
ஜூலை 21, 2025 04:36

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மனவன் மாணவர் சங்க தலைவர் ஆர் உதயகுமாரின் தந்தையை இறந்தது என் மகன் அல்ல என்று கூறவைத்த மாசை அரசு, பா பாபுவை என்னை யாரும் துறக்கவில்லை என்று சொல்லவைத்த மாடல் அரசாங்கம் கர்நாடகத்தின் மோளக்காரனுக்கு இதற்கும் ஒரு மாடல் சொலுஷன் சொல்லிக்கொடுக்கும்.


Palanisamy Sekar
ஜூலை 21, 2025 01:01

மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி விஷயத்தை கமுக்கமாக மூடிவிடும் இந்த கேடுகெட்ட காங்கிரஸ் அரசு. ஏனெனில் அப்படி ஓர் சம்பவம் நடைபெற்றிருந்தால் அதில் காங்கிரஸ்கர கும்பல்கள் நிச்சயம் சம்பந்தப்பட்டிருக்கும். இது போலியான குற்றசாட்டு என்றும் மன அழுத்தம் உள்ளதால் குடும்ப பிரச்சினையை திசைமாற்றிட இப்படி புகார் அளித்துள்ளார் என்று விஷயம் மூடி மறைக்கப்படும். பெண் காணாமல் போனதை இந்த புகார் குறித்து அறிந்த பெண்ணின் தாயார் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்த தர்மசாலா நம்பகத்தன்மை வாய்ந்த இடம் என்று சர்டிபிகேட் கொடுத்து மூடிவிடுவார்கள். இந்தியாவில் அரசியல்வாதி சம்பந்தப்பட்ட கேசுகள் எல்லாமே முழுசும் மூடி மூடப்படுவதுதானே இயற்க்கை. பரபரப்பு புஸ்ஸுன்னு போய்விடும்.


Senthoora
ஜூலை 21, 2025 06:30

வடமாநிலங்களில் பெரிய சம்பவம் நடந்தால், காங்கிரஸ் தலையில், தென்மாநிலத்தில் சம்பவம் நடந்தால் திராவிடன், திமுக தலையில் கட்டிவிட்டு கேஸ் கிளோஸ் பண்ணுவாங்க. ஆனால் கர்மா இன்னமும் பார்த்துகொண்டுதான் இருக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை