உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீரில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் சொல்லும் கணக்கு என்ன?

ஜம்மு காஷ்மீரில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் சொல்லும் கணக்கு என்ன?

ஸ்ரீநகர்: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி போட்டியிட்டது. இக்கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

அதிக ஓட்டு சதவீதம்

அதிக ஓட்டுகள் பெற்ற தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது. பா.ஜ., சார்பில் 62 வேட்பாளர்கள் (ஜம்முவில் 43 பேர், காஷ்மீரில் 19 பேர்) போட்டியிட்டனர். இதில் மொத்தம் 25.63 சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெற்றுள்ளது. இவற்றில் ஜம்முவில் மட்டும் 45.4 சதவீத ஓட்டுகளை அள்ளியதுடன் ஓட்டு சதவீதத்தில் பா.ஜ., முதலிடத்தை பிடித்துள்ளது. ஆட்சி அமைக்கவுள்ள தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களை கைப்பற்றியிருந்தாலும், 23.43 சதவீத ஓட்டுகளையே பெற்றுள்ளது. காங்கிரஸ் 11.97 சதவீத ஓட்டுகளை மட்டுமே வாங்கியது.

பகுதி வாரியாக...

பகுதி வாரியாக ஓட்டு சதவீதத்தை கணக்கிடுகையில், காஷ்மீரில் இண்டியா கூட்டணி 42.4 சதவீத ஓட்டுகளையும், பா.ஜ., 2.2 சதவீதமும், மக்கள் ஜனநாயக கட்சி 16.3 சதவீதமும், சுயேட்சைகள் 21.2 சதவீதமும் ஓட்டுகளை பெற்றிருந்தனர். ஜம்முவில் இண்டியா கூட்டணியின் ஓட்டு சதவீதம் குறைந்து 32.8 ஆகவும், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்து 45.2 ஆகவும் பதிவானது.

ஹிந்து - முஸ்லிம்

90 சதவீதத்திற்கும் அதிகமான ஹிந்துக்கள் வசிக்கும் மாவட்டங்களில் பா.ஜ.,வுக்கு தான் அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. அந்த மாவட்டங்களில் பா.ஜ.,வுக்கு 54.3 சதவீதமும், இண்டியா கூட்டணிக்கு 28.4 சதவீதமும் ஓட்டுகள் கிடைத்தன. அதேநேரத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் மாவட்டங்களில் இண்டியா கூட்டணிக்கு 41.9 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இங்கு பா.ஜ.,வுக்கு வெறும் 4.1 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

K V Ramadoss
அக் 10, 2024 03:17

தவறு. ஜம்மு, காஷ்மீருடன்தான் இருக்கவேண்டும். காஷ்மீரை இழுத்துப்பிடிக்கும் சக்தி அது. இல்லாவிட்டால் காஷ்மீர் தறி கெட்டு போய்விடும்.


M Ramachandran
அக் 09, 2024 19:55

ஜெய் ஸ்ரீராம். ராமன் பெயரை வைத்து கொண்டிருக்கும் அந்த ஸ்ரீ ராமன் இது உங்களுக்கு கண் உறுதலயா ஒடுங்கள் தேர்தல் அதிகாரியை நோக்கி. வேலையில்லாதா ......... பூனையை பிடித்து செரச்சானாம். நீஙகளேள்ளெலாம் பஞ்சத்துக்கு ஆண்டி


விஜயேஷ்பாலன்
அக் 09, 2024 19:32

காங்கிரஸ் வாழ்ந்து கெட்டவங்க. பா.ஜ வாழ்ந்து கெடப்போறவங்க. History always repeats.


என்றும் இந்தியன்
அக் 09, 2024 16:45

Jammu & Kashmir National Conference – JKN 42 Bharatiya Janata Party – BJP 29 Indian National Congress – INC 6 Jammu & Kashmir Peoples Democratic Party – JKPDP 3 Jammu & Kashmir People Conference – JPC 1 Communist Party of India Marxist - CPIM 1 Aam Aadmi Party – AAP 1 Independent – IND 7


Rajan
அக் 09, 2024 16:22

ஜம்முவை தனி மாநிலமாக அறிவித்திருக்க வேண்டும்


குமரி குருவி
அக் 09, 2024 14:32

காங்கிரஸ் டவுசர் டர்...


S.kausalya
அக் 09, 2024 13:47

மோடிக்கு இன்னும் ஒரு தலைவலி


Duruvesan
அக் 09, 2024 13:34

ஹிந்துக்களுக்கு நீங்க ஒண்ணுமே செய்யல. நீங்க என்ன பண்ணாலும் அவங்க ஓட்டு அங்க தான் போகும், ஆனாலும் கான் கிராஸ் கட்சி 6 சீட் ஜெயிச்சது சூப்பர் பா


Rpalnivelu
அக் 09, 2024 15:46

காங்கிரெஸ் கட்சி என்று சொல்லாதீங்க? காங்கிரெஸ் கட்சி என்ற்றோ மூடி முள்ளடித்து போயாகி விட்டது. இப்போ இருப்பது ரஹூல் ராஜீவ் பெரோஸ் கான் கட்சி. காங்கிரசுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்ல. ஹெட் ஆபிஸ் பட்டயாவில் இருக்கு


hari
அக் 09, 2024 16:17

இந்த முட்டுக்கு உனக்கு 200 ரூபாய் வந்தா எங்களுக்கு எல்லாம் சந்தோஷம். தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை