உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணி மாறி களமிறக்கும் தலைவர்கள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி எது?

அணி மாறி களமிறக்கும் தலைவர்கள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி எது?

புதுடில்லி:சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சி மாறிய தலைவர்களால் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போகும் கட்சி என்பது தீர்மானிக்கப்படலாம் என, அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.அடுத்த மாதம் 5ம் தேதி டில்லி சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. 70 தொகுதிகளுக்கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, எதிர்க்கட்சியான பா.ஜ., காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.தேர்தலை முன்னிட்டு இம்மூன்று கட்சிகளிலுமே முக்கிய தலைவர்கள் கட்சித்தாவும் நிகழ்வுகள் அரங்கேறின. 20க்கும் மேற்பட்டோர், இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமென தாவினர்.கடந்த முறை எதிரெதிரே போட்டியிட்டவர்கள், இம்முறையும் அப்படித்தான் போட்டியிடுகின்றனர். ஆனால், கட்சிதான் வேறு.இத்தகைய சூழ்நிலை, அரசியல்வாதிகளுக்கு புதிதில்லை என்றபோதிலும், வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.புதிய கட்சியில், புதிய சூழலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. தாங்கள் எடுத்த முடிவை வாக்காளர்களிடம் சொல்லி, வெற்றியை பெறுவதில் அவர்களுக்கு சவால்கள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.ஏற்கனவே அந்தந்த கட்சியில் வேட்பாளராக களமிறங்கலாம் என்ற கனவுடன் இருக்கும் நபர்களுக்கு மத்தியில், புதிதாக நுழைந்து வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு சுமுகமான பயணமாக இருக்காது என்பது மட்டும் உறுதி.ஆம் ஆத்மி சார்பில் படேல் நகரில் போட்டியிடும் பிரவேஷ் ரத்தன், முந்தைய தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இதே தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த், முந்தைய தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டார்.இருவருக்குமே தொகுதி புதிதில்லை. ஆனால் சூழ்நிலை மாறியுள்ளது. களம் ஒன்று தான். காட்சி வேறு.தம்தம் கட்சியில் உள்ள புதிய நண்பர்களுடன் களத்தில் காண்பதால், வெற்றியை நோக்கி இருவருமே தீவிரமாக பயணம் செய்து வருகின்றனர்.இதே நிலைதான் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் உள்ளது.பல புதிய வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.செஹ்ராவத், ஹாஜி இஷ்ராக், அப்துல் ரஹ்மான் ஆகியோர் ஆச்சரியங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டவர்கள் என, காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஒப்புக் கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !