உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெயித்தால் 5 ஆண்டுகள் என்ன செய்வோம் என்பதை மக்களிடம் சொல்லிவிட்டோம்: தேஜஸ்வி யாதவ்

ஜெயித்தால் 5 ஆண்டுகள் என்ன செய்வோம் என்பதை மக்களிடம் சொல்லிவிட்டோம்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா; பீஹார் தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் என்ன செய்வோம் என்பது குறித்து மக்களுக்கு எல்லாவற்றையும் சொல்லி வருகிறோம் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாட்னாவில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; பிரசாரத்தின் போது மக்களிடம் என்ன சொன்னோமோ, அதை நிறைவேற்றுவோம். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இண்டியா போன்ற அறிவிப்புகள் என்ன ஆனது?எங்கள் வேலையின் மீது பூரண நம்பிக்கை உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை விலாவாரியாக மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். லாலு, தேஜஸ்வி ஆகியோரை விமர்சித்து பேசுவதை தவிர்த்து ஆளும்கட்சியினர் வேறு எதுவும் பேசுவதாக இல்லை. இம்முறை பீஹார் மக்கள் மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர்.இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை