உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.200 கோடி வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ் அப் செயலி: நிர்மலா சீதாராமன்

ரூ.200 கோடி வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ் அப் செயலி: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:'' வாட்ஸ் அப் செயலி உதவியுடன், கிரிப்டோ கரன்சி தொடர்பான கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டது,'' என லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.கடந்த 13ம் தேதி லோக்சபாவில் புதிய வருமான வரி மசோதா 2025 தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வரி ஏய்ப்பையும், நிதி மோசடியையும் தடுக்க வரி அதிகாரிகளுக்கு டிஜிட்டல் ஆவணங்களை அணுக அனுமதிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று.மொபைல்போனில் ' என்கிரைப்டட்' செய்திகள் மூலம் ரூ.250 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. வாட்ஸ்அப் செயலியில் இருந்த செய்தி மூலம், கணக்கில் வராத கிரிப்டோ பணம் குறித்த தகவல் கிடைத்தது. கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்க வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் உதவியாக இருந்தது.பணத்தை மறைக்க அடிக்கடி செல்லும் இடங்களை கூகுள் மேப் செயலி கண்டுபிடித்து கொடுத்தது. இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஆய்வு செய்த போது, பினாமி சொத்துகளின் உரிமையாளர் குறித்த விவரங்கள் தெரியவந்தன.இதுபோன்ற நடவடிக்கைகள், புதிய தொழில்நுட்பத்துடன் வரி அமலாக்கம் குறித்த நடவடிக்கைகள் புதுப்பித்த நிலையில் வைத்து இருக்க உதவியது. கிரிப்டோகரன்சிகள் போன்ற சொத்துக்கள் கவனிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த மசோதாவானது, வாட்ஸ்அப், டெலிகிராம், இமெயில் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களை அணுக அதிகாரம் அளிக்கிறது. நிதி பரிமாற்றங்களை மறைக்க பயன்படுத்தப்படும் மென்பொருள் மற்றும் சர்வர்களையும் அதிகாரிகளால் அணுக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

S BALAMURUGAN
மார் 28, 2025 12:49

புதிய கண்டுபிடிப்புகள் அனைத்துமே மிகவும் சிறப்பானதையே ஏமாற்றுகிறார்கள் கண்டுபிடித்து அதற்கான அபராதங்கள் விதிப்பதும் சரியானதே. ஆனால் ஜிஎஸ்டி துறையில் சில அதிகாரிகள் ஏமாற்றுபவர்களை விடுவித்து நேர்மையானவர்களை மனசாட்சி இல்லாமல் அவர்களிடம் ஏதோ ஒரு காரணத்திற்காக வேண்டுமென்றே அபராதம் விதித்து துன்புறுத்தும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை எல்லாம் அரசு களை எடுத்தால் நாடு நலம்பெறும்.


Sivaprakasam Chinnayan
மார் 28, 2025 07:09

நீட் வினாத்தாள் டெலிகிராம் வாட்ஸ் அப் பல என் டி ஏ தேர்வுகள் வினாத்தாள் அவுட் மூடி மறைக்க வசதியாக இருக்கும்


K.n. Dhasarathan
மார் 26, 2025 20:53

அம்மா டெல்லி நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றியதற்கு காரணம் தீ அணைப்பு துறைதான், குப்பை அள்ளும் தூய்மைப்பணி ஆட்களின் உதவியோடுதான், இந்த ஈ. டி . வருமான வரி துறை இன்னும் பல , இவை எல்லாம் எதற்கு ?


Ramesh Sargam
மார் 26, 2025 19:48

வாட்ஸ் அப் செயலியின் செயல்பாட்டில் குறை உள்ளது. வரி ஏய்ப்பு ரூ. 2,000 கோடி அல்லது ரூ. 20,000 கோடியாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.


A P
மார் 26, 2025 19:32

நமது தாய்திரு நாட்டின் மரியாதைக்குரிய நிதிஅமைச்சரை கண்டபடி பேரிட்டு அழைக்க இவரெல்லாம் வேறு தேசத்தவரா என்று கண்டுபிடிக்க வேண்டும். இந்தியாவில் இருப்பவரே என்றால், இவருக்கு தகுந்த தண்டனை தருவதற்கு அரசுகள் ஆவண செய்ய வேண்டும்.நாட்டுப் பற்றற்ற நாலுகால் பிராணிகள்தான் இவர்களெல்லாம்.


நிக்கோல்தாம்சன்
மார் 26, 2025 20:35

ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்த மக்களின் வாரிசுகள் இன்றும் அதே ஜீனோடு என்பதனை நிரூபிக்கிறாரால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை