வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சூப்பர்
Useful informatin
புதுடில்லி: வாட்ஸ்அப்பில் வந்துள்ள புதிய 'அப்டேட்' மூலம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரட்ஸ் ஆகிய மூன்று சமூக வலைதளங்களையும் வாட்ஸ்அப்பில் இருந்தபடி இயக்க முடியும்.கோடிக்கணக்கான பயனர்களை தன் வசம் ஆக்கி, சமூக வலைதளத்தில் வாட்ஸ் அப் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி புது புது அப்டேட்களை செய்து கொண்டு வருகிறது. குறிப்பாக, வீடியோ கால், ஆடியோ கால், குரூப் வீடியோ கால் என்று ஏராளமாக வசதிகளை பயனர்களுக்கு செய்து கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி ஊருக்கு ஒரு குரூப், ஆபிஸ்க்கு ஒரு குரூப் என அனைவருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் வரும் மெசேஜ் பார்ப்பதற்கே தினமும் நிறைய நேரம் தேவைப்படுகிறது. இந்த சூழலில் பயனர்களுக்கு மற்ற சமூகவலைதளமான பேஸ்புக், த்ரெட்ஸ், இன்ஸ்டா கிராமை எளிதாக இயக்குவதற்கு ஒரு கலக்கல் அப்டேட் வெளியாகி உள்ளது. * வாட்ஸ் அப்பில் பயனர்கள் setting செல்ல வேண்டும். அதில் ஓபன் இன்ஸ்டா, பேஸ்புக், திரட்ஸ் என்று ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.* வாட்ஸ்அப்பில் வந்துள்ள புதிய 'அப்டேட்' மூலம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரட்ஸ் ஆகிய மூன்று சமூக வலைதளங்களையும் வாட்ஸ்அப்பில் இருந்தபடி இயக்க முடியும்.* PROFILE ல் சென்று லிங்க் ஆப்ஷனை க்ளிக் செய்து இணைத்துக் கொள்ளலாம். இது யார் யாருக்கும் காட்ட வேண்டும் என்பதை எடிட் செய்து கொள்ள முடியும்.இந்த புதிய அப்டேட் வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர்
Useful informatin