உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி எப்போது; எப்படி?

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி எப்போது; எப்படி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எப்போது, எப்படி பதிலடி தரப்போகிறது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக, பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனீர், இந்தியாவுக்கு எதிராக பேசிய சில நாட்களில், பஹல்காம் தாக்குதல் நடந்துள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய விதம், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பார்க்கும்போது, இது நிச்சயம், பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் போர்வையில் நடத்தியது என்பதை கூற முடியும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xcj9jkx6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு பக்கம், இந்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதுடன், ஹிந்து - முஸ்லிம் மோதலை ஏற்படுத்துவதே அவர்களுடைய நோக்கமாக இருந்துள்ளது. இதனால் தான், மதத்தின் பெயரைக் கேட்டு, முஸ்லிம் அல்லாதோரைக் கொன்றுள்ளனர். தற்போதைய நிலையில், மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சர்வதேச அரங்கில், பாகிஸ்தானை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளன. மேலும், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து போன்றவை, பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை அடுத்து வரும் மாதங்களில் நிச்சயம் ஏற்படுத்தும்.இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் நிச்சயம் அதிரடியான பதிலடி கொடுக்கும் என்பது பாகிஸ்தானுக்கும் தெரியும். ஆனால், அது எப்படி, எப்போது என்பதை தற்போதைக்கு யூகிக்க முடியாது.போர் ஏற்பட்டால், நிச்சயம் இருதரப்புக்கும் இழப்புகளை ஏற்படுத்தும். ராணுவ பலம் உள்ளிட்டவற்றில் இந்தியா மிகவும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில், ரத்தம் இழக்காமல், பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதே, பிரதமர் மோடி அரசின் வியூகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 27, 2025 15:29

இந்த அமைதியை நான் மிகவும் ரசிக்கிறேன் , ஆம் சூட்டோடு சூடு என்று இறங்கி ஆடுவதற்கு இது ipl அல்ல , அவர்களின் கண்ணை குத்துவது தான் சரியாக இருக்கும் ,


Ramesh Sargam
ஏப் 27, 2025 13:23

நமது பிரதமர் திரு மோடி அவர்கள், அவரது சவூதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியபோது. நான் நினைத்தேன் ஏதோ பெரிய சம்பவம் போர் நடக்கும் என்று. என் எண்ணத்தில் மண்விழுந்ததுதான் மிச்சம். வெறும் கண்டனம் மற்றும் எச்சரிக்கை கொடுத்துவிட்டு சும்மா இருந்துவிட்டார். இது சரியல்ல. பாகிஸ்தான் மீது ஒரு கடுமையான தாக்குதல் நடத்தவேண்டும். அங்குள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து கூண்டோடு ஒழிக்க வேண்டும். பிறகு, இந்தியாவில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் கூண்டோடு ஒழிக்கவேண்டும்.


பாமரன்
ஏப் 27, 2025 14:39

என்னங்க ரமேஷ் பொசூக்குன்னு இப்படி சொல்ட்டீங்கோ...


kumar c
ஏப் 27, 2025 12:19

சிறப்பு, இதை தி மு க ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருக்கும் பொது சொல்லியிருக்கலாமே . 2014 முதல் 2025 வரை இறந்த ஒரு மீனவனை காப்பாத்தி இருக்கலாம். 2004 முதல் 2014 வரை இறந்த 600 மீனவனை காப்பாத்தி இருக்கலாம்.இங்கு புரிய வேண்டியது இலங்கை உறவு நமக்கு வேண்டும் பாக்கிஸ்தான் உறவு நமக்கு தேவை இல்லை. இப்படி தான் கையாள வேண்டும். விடியல் உக்ரைன் கு பஸ்ஸில் போய் மாணவர்களை காப்பதினாறு.இப்ப எதாவது செய்து போர் செய்வது குத்தம்னு கோர்ட் ல ஒரு ஆர்டர் வாங்ககூடாதா. போரை தடுத்த விடியல் னு ஒரு பாராட்டு விழா நடத்தலாமே .


Velan Iyengaar
ஏப் 27, 2025 11:54

CCS என்ன செய்து கொண்டிருந்தது இதுவரை?? வெறும் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டு யாருக்கு டெண்டர் தந்தால் கமிஷன் கூடுதலாக கிடைக்கும் என்று மட்டும் ஆலோசித்துக்கொண்டு இருந்ததா? ஏதாவது ஒரு தீவிரவாத ரிஸ்க் PLAYBOOK தயார் செய்து இருக்கிறார்களா? செய்து இருந்தால் இந்நேரம் அந்த playbook படி ஒரு பதில் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்னமாதிரியான தீவிரவாத தாக்குதல் எங்கு நடக்க வாய்ப்பு? அப்படி நடந்தால் என்ன மாதிரி பதில்நடவடிக்கை எடுக்கவேண்டும்? தாக்குதல் தீவிரம் எந்த விதத்தில் இருந்தால் அதற்க்கு எந்த அளவுக்கு பதில் நடவடிக்கை எடுக்கவேண்டும்? யோசித்து வைக்காத விதத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால் அதற்க்கு என்ன மாதிரி பதில்வினை ஆற்றிடவேண்டும்? இது குறித்த எதாவது ஒரு ஆக்கபூர்வ செயல் இந்த பாதுகாப்பு கமிட்டி செய்து இருக்கிறதா ???


Suppan
ஏப் 27, 2025 17:23

வேலனுக்கு CCS ன் நிரந்தர செயலாளர் பதவி கிடைக்க விடியலை வேண்டுகிறேன். அதென்னய்யா Playbook ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 27, 2025 11:53

சங்கிகளும் திமுகவின் கூலிப்படைகளுடன் இணைந்து மத்திய அரசை விமர்சிப்பது அந்த கூலிப்படைகளுக்கு நிச்சயம் வெற்றிதான் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 27, 2025 10:25

போர் தேவையில்லை என்ற திருமாவளவன், சித்தராமையா கருத்தை ஆதரித்தவர்கள் இங்கே மத்திய அரசைக் குறை கூறுகிறார்கள் .... திமுகவுக்கும் சரி .... அதன் அடிமைகளுக்கும் சரி .... இரட்டை நாக்குகள் ....


பாமரன்
ஏப் 27, 2025 10:23

"சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு இந்திய ஜல்சக்தி துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி கடிதம் அனுப்பி இருக்கிறார்.. 19.09.1960 ஆம் ஆண்டு இரு நாட்டின் பிரதமர்களால் கொண்டு வரப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இப்போதைய பிரதமர் ரத்து செய்யும் அதிகாரம் இருக்குமேயானால், அதே அதிகாரத்தை பயன்படுத்தி இந்திரா காந்தி அவர்கள் போட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மோடி அவர்கள் ஏன் ரத்து செய்யக்கூடாது ? கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் மாண்டு இருக்கிறார்கள். சிந்து நதிநீர் எதன் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டதோ அதன் அடிப்படையிலேயே கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு கச்சத்தீவை இந்தியா தன்வசப்படுத்த வேண்டும். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் தவிர உலக வங்கி துணைத் தலைவர் இலிப் மூன்றாவதாக கையெழுத்திட்டு இருக்கிறார். அப்படிப்பட்ட ஒப்பந்தத்தையே ரத்து செய்யும் அதிகாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளது என்றால் சாதாரணமாக போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் ஏன் ரத்து செய்ய முடியாது? ஞாயமா சந்தேகம் கேட்டா திட்டப்பிடாது பகோடாஸ்... பதில் இல்லைன்னா பெட்ரோலிய பொருட்கள் விலை நியூஸ் மாதிரி சைலண்ட் மோட்ல இருக்கோனும்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 27, 2025 10:52

உன்ன மாதிரி ஆட்கள் தான் மார்க்கம் வெறுப்புக்கு ஆளாவது காரணம்


Velan Iyengaar
ஏப் 27, 2025 11:00

வெளுத்து வாங்கிட்டிங்க பாமரன்


பேசும் தமிழன்
ஏப் 27, 2025 15:09

உங்களுக்கு பாகிஸ்தான் நாட்டு மக்களின் மீது இருக்கும் அக்கறையை நினைத்தால்.... புல்லரிக்குது..... பேசாமல் பாகிஸ்தான் சென்று.....பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து..... உயிரை விடலாம்.


Velan Iyengaar
ஏப் 27, 2025 16:16

பேசும் தமிழனுக்கு தமிழ் கூட படிக்கச் தெரியாது போல .... அவர் எழுப்பும் கேள்விக்கும் பாகிஸ்தான் அக்கறைக்கும் சம்பந்தம் இருக்கா ??? ??? இவ்ளோ புத்தி மட்டா ??


Barakat Ali
ஏப் 27, 2025 09:50

தாக்குதலுக்கு தாமதமானால் மக்கள் பாதுகாப்பில் அக்கறை அற்ற அரசு... சம்பவம் நடந்து பதினொன்றே நாட்களில் தாக்கினாலும் தாக்கினது உண்மையான்னு கேள்வி கேட்போம்.. இதுதான் தேசவிரோத டிசைன்.. உள்துறை, பாதுகாப்புத்துறை, முப்படைகளின் தலைவர், முப்படைகளின் தளபதிகள் இவங்களுக்கெல்லாம் திறமை பத்தாது... இருநூறு ஓவாய் கூலிகளான நாங்கதான் இன்டெலிஜெண்ட்ஸ் ....


Velan Iyengaar
ஏப் 27, 2025 11:43

ஆனா உண்மை அது தானே?? இப்படி சுயகோல் அடித்துக் கொள்ளக் கூடாது


globetech engineers airport project
ஏப் 27, 2025 09:36

பதில் நடவடிக்கைகள் ஓன்றும் இருக்காது.


Velan Iyengaar
ஏப் 27, 2025 09:27

இந்நேரம் ஒரு பதிலடியை தனது முடித்திருக்கவேண்டும்


Velan Iyengaar
ஏப் 27, 2025 11:47

உண்மை எப்போதும் கசக்கும்


Suppan
ஏப் 27, 2025 17:29

பதிலடி கொடுக்கும் பொழுது ராகுலையும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார்களாம். ஏனென்றால் பதிலடிக்கு ஆதாரம் கேட்டிடக் கூடாதல்லவா? திரு.ராகுல் இன்னும் தேதி கொடுக்கவில்லை. எங்கோ பதுங்கி இருக்கிறாராம். கூடவே அபிஷேக் சிங்க்வி, கபில் சீப்பல் ஆகியோரையும் அழைத்துச்செல்ல ஏற்பாடு நடக்கிறது.


புதிய வீடியோ