உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எங்கே செல்லும் இந்த பாதை: வகுப்பறையில் மது குடித்த மாணவியர்!

எங்கே செல்லும் இந்த பாதை: வகுப்பறையில் மது குடித்த மாணவியர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: அரசு பள்ளி வகுப்பறையில் மாணவிகள் மது குடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் பட்சவுரா என்ற கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படித்த பள்ளி மாணவிகள்,வகுப்பறையில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அவர்கள் கடந்த ஜூலை 29ம் தேதி மது குடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக துவங்கியது.இது மாவட்ட கல்வி அதிகாரி(டிஇஓ)யின் கவனத்தற்கு வந்தது. சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தார். சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பெற்ற குழுவினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.டிஇஓ கூறுகையில், 'நாங்கள் மது குடிக்கவில்லை. விளையாட்டாக பாட்டிலை கைகளில் பிடித்து வீடியோ பதிவு செய்ததாக' தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது' என்றார்.பள்ளியை சேர்ந்த சிலர் கூறியதாவது: சம்பவம் நடந்த 29ம் தேதியன்று மாணவி ஒருவரின் பிறந்த நாள். அதை வகுப்பறையில் கொண்டாடிய மாணவிகள், மது குடித்து அதை வீடியோ பதிவு செய்துள்ளனர். அங்கிருந்த மாணவிகளில் ஒருவர் தான், வீடியோ வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Thillai Rajan
செப் 12, 2024 08:10

First we should not blame others


Sivaprakasam Chinnayan
செப் 11, 2024 19:21

Non sense thinking. First understand the issue and find out the root cause. All government are doing selling of liquor should be be stop first. Most parties will not do this. Because all politicians are doing same business and no.pne is coming for doing service. Here some genius blame own state. First think where the incident happen and why it is happening.


Tetra
செப் 11, 2024 15:50

ஏம்பா எல்லாத்துக்கும் முன்னோடியான திராவிடம் ஆட்சி செய்யும் நம் தமிழ் நாட்டில் மாணவிகள் பேரூந்திலேயே குடிக்கலயா?


karunamoorthi Karuna
செப் 11, 2024 09:26

திராவிட மாடல் கல்வி திட்டத்தின் ஒரு பகுதி தான் இது


lana
செப் 10, 2024 22:45

இங்கு ஒருவர் சொந்த மாநிலம் மீது தவராக பேசுவது என்று குறை சொல்கிறார்கள். இதை தான் சொல்கிறார்கள் ஒருவர் இந்தியா குறித்து வெளி நாட்டில் குறை செல்லுகின்ற போது என்ன செய்து கொண்டிருக்கிறது


சமூக நல விரும்பி
செப் 10, 2024 22:04

மாணவ மாணவிகள் மது குடிக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம். வீட்டில் அப்பா மாமா அண்ணன் சித்தப்பா இப்படி பலர் குடிக்கிறார்கள். அது எவ்வளவு கெடுதல் என்று தெரிந்தும் அதை குடித்து விட்டு அவர்கள் செய்யும் அட்டகாசம் சொல்லி மாலாது. இதற்கு யார் பொறுப்பு. மாணவ மாணவிகளுக்கு ஒரு உந்துதல் அது எப்படி இருக்கும் என்று பலவிதமாக யோசித்து நாமும் ஒரு நாள் முயற்ச்சி செய்து பார்க்கலாம் என்ற வேகம் ஏற்படுகிறது. அதனால் இவைகள் எல்லாவற்றுக்கும் யாரை காரணம் காட்டலாம் என்றால் முதலில் அரசு பின்னர் வீட்டில் மது குடிப்பவர்கள். இதற்கு ஆசிரியர் என்ன செய்வார். அவர் குடிக்க சொன்னாரா. இவற்றை எல்லாம் கட்டு படுத்த வேண்டியது அரசும் பெற்றோரும் தான். அரசு திருந்தாத வரை மக்கள் நாசமா போக. வேண்டியது தான்.


Jagadeesan R
செப் 10, 2024 21:10

தலைமை ஆசிரியர் மேல் நடவடிக்கை.பிரச்சனை முடிந்தது.


தமிழ்வேள்
செப் 10, 2024 19:54

திராவிட சாக்கடை கருத்தியல் மற்றும் நாற்றம் வீசும் கேவல வாழ்வியல் தமிழகத்துக்கு வெளியேயும் பரவ துவங்கி விட்டது...இது விஷ விருட்சமாக மாறும் முன்பே திராவிட நாத்திக தேசதுரோக ஆப்ரஹாமிய அடிமை கும்பலை அதன் விஷ கருத்தியலை வேரில் வென்னீர் ஊற்றி அழிக்க வேண்டும்....தண்டநீதி ஒன்றே திராவிட பொறுக்கி சிந்தாந்தத்தை கருவறுக்க செய்யும் வழி.... திராவிடம் முற்றிய கேன்சரை விட பல மடங்கு கொடூரமான ஒன்று....


metturaan
செப் 10, 2024 19:32

ஆசிரியர்கள் தகுதி & பொறுப்பு... பெற்றோர் கவனமின்மை... சமூக அக்கறை... பிள்ளைகள் எதிர் கால சிந்தனை .. இவைகள் குறையக் குறைய எதுவும் நடக்கும்...


அஸ்வின்
செப் 10, 2024 19:18

வீட்டுலயும் குடிக்குதுக இது இப்ப சர்வசாதாரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை