உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தன்கர் எங்கே?

தன்கர் எங்கே?

துணை ஜனாதிபதியாக இருந்த தன்கர், இப்போது எங்கே இருக்கிறார்? காணாமல் போன பெண்களை பற்றி லாபட்டா லேடீஸ் என்ற திரைப்படம் வாயிலாக நான் அறிந்துள்ளேன்; ஆனால், துணை ஜனாதிபதி காணவில்லை என்பதை இதுவரை நான் அறிந்ததில்லை. ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமா? கபில் சிபல் ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,

அரசுக்கு ஆதரவு!

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் அமெரிக்கா வரி விதித்து இருப்பது நம் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சி; இத்தருணத்தில், நாட்டு நலனை கருத்தில் வைத்து நாம் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும். நம் அண்டை நாடுகளும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன. அந்நாடுகளுடன், மீண்டும் நட்புறவை மேம்படுத்த வேண்டும். சரத் பவார் தலைவர், தேசியவாத காங்., - சரத் பவார் அணி

பதவி விலகுங்க!

தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லையெனில் தார்மீக அடிப்படையில் ராகுல், தன் லோக்சபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ராகுலுடன் இணைந்து, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தேர்தல் கமிஷன் மீது சுமத்தும் பிரியங்கா, சோ னியா உள்ளிட்டோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கவுரவ் பாட்டியா தேசிய செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை