உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து: அசாமில் அரசு அதிகாரி கைது

வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து: அசாமில் அரசு அதிகாரி கைது

கவுகாத்தி: அசாமில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த பெண் அரசு அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.அசாமின் கோலாகட் மாவட்டத்தை சேர்ந்தவர் நுபுர் போரா. 1989 ல் பிறந்த இவர், கவுகாத்தி பல்கலையில் ஆங்கில இலக்கியம் பட்டம் பெற்றவர். துவக்கத்தில் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். பிறகு அசாம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 2019 ல் அரசு அதிகாரியாக தேர்வானார். முதலில், கர்பி அங்லோங் என்ற இடத்தில் துணை கமிஷனராக பணியை துவக்கினார். கடந்த ஆறு ஆண்டுகளாக பணியில் இருக்கும் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து மற்றும் பணம் சேர்த்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரை கடந்த 6 மாதங்களாக கண்காணித்து வந்ததாக முதல்வர் ஹிமாந்தா பிஸ்வ சர்மா கூறியிருந்தார்.இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகள், நுபுர் போரா வீட்டில் சோதனை நடத்தினர். அதில் அவரது வீட்டில் இருந்து ரூ.1 கோடி மதிப்பு தங்கம் மற்றும் ரூ.92 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரது உதவியாளர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

எஸ் எஸ்
செப் 17, 2025 10:38

இந்துக்களுக்கு சொந்தமான நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் வேற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு மாற்றி கொடுத்து சம்பாதித்து உள்ளார் என்று இன்று ஒரு நாளேட்டில் செய்தி வந்துள்ளது


theruvasagan
செப் 16, 2025 22:27

பெண்கள் சமத்துவம் வெறும் முழக்கம் கிடையாது. சமத்துவத்தையும் கடந்து எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார்கள்.


Kulandai kannan
செப் 16, 2025 20:34

அரசு ஊழியர் என்றாலே திருடர்கள்தான்


நிக்கோல்தாம்சன்
செப் 16, 2025 22:33

இந்த தைரியம் நீங்க வோட்டு போட்டு செலெக்ட் செய்த மக்களையும் குறிப்பிட்டு சொல்லியிருந்தா வரவேற்றிருப்பேன்


Perumal Pillai
செப் 16, 2025 20:20

Since IAS officials hold the 'License to Loot' badge, they enjoy immunity from arrest. Then how is it that this woman was arrested for doing her recognized duty? This is not in good taste. She should have been allowed to carry on her trade, just as all other IAS officials are permitted to loot.


Sivak
செப் 16, 2025 19:59

பெண்கள் நாட்டின் கண்கள் ... ஆணும் பெண்ணும் சமம்... ஆனா மாசா மாசம் 1000.. 2000.. 2500 பெண்களுக்கு மட்டும் ... ஆண்களுக்கு பிம்பிளிக்கி பிளாப்பி ...


Sivak
செப் 16, 2025 19:56

ஆமாம் இப்போ நெறைய அம்மாக்களும் சிக்குகிறார்கள் ...


Iyer
செப் 16, 2025 19:02

மந்திரி சபையை ஊழல் இல்லாமல் மோதி சுத்தப்படுத்திவிட்டார். அடுத்து அதிகாரிகள் வர்கத்தை சுத்தம் செய்ய தொடங்கிவிட்டார் போலும்


தியாகு
செப் 16, 2025 18:53

ஹி...ஹி...ஹி...இதெல்லாம் ஒரு பெருமையா, எங்க டுமிழ்நாட்டுக்கு வாங்க, கட்டுமர திருட்டு திமுகவின் சாதாரண வார்டு மெம்பெர் கூட இதை விட பல மடங்கு ஆட்டையை போட்டு வைத்திருப்பான், ஆனால் என்ன எங்குமே நிரூபிக்க முடியாதபடி ஆட்டையை போட்டிருப்பான். எல்லாம் கட்டுமர பட்டறையின் அடிபுலி ட்ரைனிங். ஹி...ஹி...ஹி...


Moorthy
செப் 16, 2025 18:37

10000 இல் ஒருவர் ஏதோ வேறு சில காரணங்களுக்காக சிக்க வைக்கப்பட்டுள்ளார்... அவ்வளவே


chidhambaram
செப் 16, 2025 18:19

10 வருஷம் கேஸ் நடக்கும் , அப்புறம் ரொக்கம் கைப்பற்றியது அவரது வீடு என்பதை நிருபிக்க முடியாததால் இவரை விடுவித்து விடுவார்கள் .... ஏன்னா இவரது dealing கோடிக்கணக்கில் , சில நூறு அல்லது ஆயிரம் எனில் குற்றம் நிரூபிக்க பட்டுவிடும்


முக்கிய வீடியோ