உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்: 7 நாளுக்குள் விளக்கம் தர உத்தரவு

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்: 7 நாளுக்குள் விளக்கம் தர உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார். சத்யபாமாஆகியோரிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 7 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவிட்டு உள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேல், அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா, பெருந்துரை தொகுதியில் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=75sg48c3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விஜய் தலைமையிலான தவெக அரசு மீது சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதன் பிறகு நான்கு பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டதால் அவர்கள் மீது ந டவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அதிமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.இந்நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது குறித்து நான்கு பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் பிரபாகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அடுத்த 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sundhararajan Krishnan
ஜூன் 12, 2026 20:53

When decision on disqualification issue is pending without proper explanation is accepted.If Speaker is proceeding on the letter of AIADMK leader seeking disqualification he should ask why the members should not be disqualified under relevant provision /rules for disobeyed the direction of the WHIP of AIADMK


rama adhavan
ஜூன் 12, 2026 19:29

ராஜீனமா ஏற்கப்பட்டு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே அந்த நால்வரும் சட்டசபை உறுப்பினர்களே இல்லை. இந்நிலையில் எப்படி சபைநாயகர் விளக்கம் கேட்க முடியும்? தலை சுற்றுகிறதே.


manian
ஜூன் 12, 2026 16:50

Is it illegal to resign.It has Happened many times in indian politics


duruvasar
ஜூன் 12, 2026 16:32

ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது யாரு ? சட்ட மேதை ஆயிரற்றே. எல்லாம் சட்டதிட்ட த்திற்கு உட்பட்டுதான் நடக்கிறது பலே பாண்டியா .


குமரன்
ஜூன் 12, 2026 16:17

இந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் அரசுக்கு கூடுதல் செலவாகிறநது ஆகவே அந்த மறு தேர்தல் செலவை ராஜினாமா செய்தவர்களே ஏற்றுக் கொள்ள தேர்தல் கமிஷன் பரிந்தூரைக்க வேண்டும் மேலும் ராஜினாமா செய்வதற்கு சரியான காரணம் இல்லை என்றால் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும் அப்போது தான் யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள்.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி நாயக்கர்
ஜூன் 12, 2026 15:42

மூன்று பேர் கை கூப்பிக் கொண்டு இருக்க, இசக்கி மட்டும்.... புரிந்தவன் பிஸ்தா.


VSMani
ஜூலை 09, 2026 17:43

ஆமாம், இசக்கி சுப்பையா மட்டும் இடது கை ஓங்கி இருக்கிறது வலது கையை காணோம். எங்கே?


M Ramachandran
ஜூன் 12, 2026 15:39

எங்களுக்கு ஆ தீ மு க்கா வின் தலமை போக்கு பிடிக்க வில்லை என்று கூறுவார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 12, 2026 15:13

கட்சி மாறல் தடைச் சட்டத்தின் கீழ் மனு விசாரணையில் உள்ள போது அவர்களது ராஜினாமாவை எப்படி ஏற்றீர்கள்? புகார் விசாரணையில் இருக்கும் அதிகாரிகளது ராஜினாமாவை அரசு ஏற்பதில்லை.


Raghavan
ஜூன் 12, 2026 15:08

தேர்தலில் இவர்களுக்கு அடுத்ததாக வெற்றிபெற்றவர்களை MLA வாக அங்கீகரிக்குமாறு சட்டம்கொண்டுவந்தால் இதைபோல் கட்சித்தாவல்கள் காணாமல் போய்விடும். இதை மத்திய அரசோ அல்லது மாநிலஅரசுகளோ கண்டுகொள்ளாது. இளிச்சவாயர்கள் மக்கள்தான் ஆதலால் அவர்கள் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி வெற்றி பெற்றவுடன் கட்சி மாறினால் அவர்கள் குறைந்தது 10 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும்.


VSMani
ஜூலை 09, 2026 17:46

அரசியல்வாதிகள்தான் சட்டத்தை இயற்றுகின்றனர். அவர்கள் எப்படி வெற்றி பெற்றவுடன் கட்சி மாறினால் அவர்கள் குறைந்தது 10 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிப்பார்கள்? பூனைக்கு எந்த எலி மணிக்கட்டும் ?


Sun
ஜூன் 12, 2026 14:57

சபாநாயகர் அன்று என்னவோ M.L.Aக்கள் ராஜினாமா செய்ய காரணம் எல்லாம் கூறத் தேவை இல்லை என்றார். ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, கெஜட்டிலும் வெளியாகி, தொகுதியும் காலிப் பட்டியலில் வந்த பின்னர் இப்போது போய் விளக்கம் கேட்கிறார்? அன்றே விளக்கத்தை கேட்டு அவர்கள் கொடுத்த விளக்கம் சபாநாயகருக்கு திருப்தியாக இருந்திருந்தால்தானே 4 பேர் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றிருக்க வேண்டும்?


VSMani
ஜூலை 09, 2026 17:44

விளக்கம் ஒரு கண் துடைப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை