தடுத்து நிறுத்தியது ஏன்?
தோடா தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மெஹ்ராஜ் மாலிக்கை பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது தவறு. இதை எதிர்த்து நடக்கவிருந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த அவரது கட்சி எம்.பி., சஞ்சய் சிங்கை தடுத்து நிறுத்தியது ஏன்? ஜம்மு - காஷ்மீருக்கு எதிராக மத்திய அரசு எப்போதும் கடுமை காட்டுவது ஏன்? ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சிஊழலின் பிதாமகன்!
ஊழலின் பிதாமகன் என்றால், அது பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தான். மாநிலத்தில் தினமும் கொலை, கொள்ளை நடக்கிறது; பெண்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆனால் முதல்வர் நிதிஷ் குமார் ஜாலியாக இருக்கிறார். இதற்கு வரும் சட்டசபை தேர்தலில் அவர் அனுபவிப்பார். தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்ஆதாரங்களை காட்டுங்க!
துணை ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ., கூட்டணியின் வேட்பாளருக்கு ஓட்டளிக்க எம்.பி.,க்களுக்கு தலா, 15 - 20 கோடி ரூபாய் தரப்பட்டதாக கூறிய திரிணமுல் காங்., பொதுச்செயலர் அபிஷேக் பானர்ஜி, அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். தங்கள் கட்சி இடம் பெற்றுள்ள, 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்களையே அவர் சந்தேகப்படுகிறாரா? செஷாத் பூனாவாலா செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,