உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரஹலட்சுமி பணத்தில் கணவருக்கு ஸ்கூட்டர் வாங்கி தந்த மனைவி

கிரஹலட்சுமி பணத்தில் கணவருக்கு ஸ்கூட்டர் வாங்கி தந்த மனைவி

மங்களூரு: 'கிரஹலட்சுமி' திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும் 2,000 ரூபாயை சேர்த்து வைத்து, ஒரு பெண், தன் கணவருக்கு புதிதாக ஸ்கூட்டர் வாங்கி கொடுத்தார்.கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்த போது, ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது. இவற்றில் கிரஹலட்சுமி திட்டமும் ஒன்றாகும். திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.பெண்கள் பலரும் இந்த பணத்தை நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர். பிரிஜ், வாஷிங் மெஷின், மிக்சி என, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். ஒரு தாய், தன் மகனுக்கு பைக் வாங்கி கொடுத்தார். மற்றொரு மூதாட்டி, கிரஹலட்சுமி பணத்தை செலவிட்டு, ஊராருக்கு விருந்து ஏற்பாடு செய்தார்.இன்னொரு பெண், மிளகாய் அரைக்கும் இயந்திரம் வாங்கி, சுய தொழில் துவங்கினார். மற்றொருவர் தன் மருமகளுக்கு பேன்சி ஸ்டோர் வைத்து கொடுத்தார். தற்போது ஒரு பெண், தன் கணவருக்கு புதிய ஸ்கூட்டர் வாங்கி கொடுத்துள்ளார். தட்சிணகன்னடா, புத்துாரின், கொடம்பாடி அருகில் உள்ள சாந்தி நகரில் வசிப்பவர் மிஸ்ரியா. இவருக்கு மாதந்தோறும் கிரஹலட்சுமி திட்டத்தின் 2,000 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேமித்து வைத்த இவர், தன் கணவர் சலீமுக்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்துள்ளார்.சலீம், பெயின்டராக வேலை செய்கிறார். தினமும் துாரத்தில் உள்ள இடங்களில் வேலை இருந்தால், பஸ்சில் செல்வது வழக்கம். தற்போது மனைவி புதிய ஸ்கூட்டர் வாங்கி கொடுத்ததால், அவர், வேலைக்கு செல்வதற்கு உதவியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ