உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் வேடமிட்டு ஆபாச வீடியோ: அரசு டாக்டர் மீது மனைவி புகார்

பெண் வேடமிட்டு ஆபாச வீடியோ: அரசு டாக்டர் மீது மனைவி புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தில், அரசு டாக்டர் ஒருவரின், பெண் வேடமிட்ட ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவர் ஆபாச வீடியோக்களை எடுத்து, ஆன்லைனில் விற்பனை செய்வதாக அவரது மனைவியே போலீசில் புகார் அளித்துள்ளார். உ.பி.,யின் சந்த் கபீர் நாகர் மாவட்டத்தின் ஆரம்ப பொது சுகாதார மையத்தில் டாக்டராக இருப்பவர் வருணேஷ் துபே; அந்த பகுதியின் சிறை மருத்துவ அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். இவரது மனைவி, ஷிம்பி பாண்டே, கோரக்பூரில் வசிக்கிறார்.இந்நிலையில், வருணேஷின் ஆபாச வீடியோக்களும், படங்களும் இணையதளங்களில் வேகமாக பரவின. பெண்களின் ஆடைகளை அணிந்தபடி வருணேஷ் இருக்கும் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்தன. இதையடுத்து, கோரக்பூரில் இருக்கும் சொந்த வீட்டை விட்டுவிட்டு, அரசு வழங்கிய குடியிருப்பில் இருந்தபடி, ஆபாச வீடியோக்களை படம் பிடித்து ஆன்லைனில் அவற்றை விற்பனை செய்வதாக வருணேஷ் மீது, அவரது மனைவி ஷிம்பி கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

மறுப்பு

பெண் வேடமிட்டு, ஆண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்களை பதிவு செய்து, அவற்றை ஆன்லைனில் பணத்துக்கு விற்பதாகவும் கூறினார். இது தொடர்பாக, போலீசில் ஷிம்பி அளித்த புகாரில், 'இணையதளத்தில் பணம் செலுத்தி, என் கணவரின் சில வீடியோக்களை பார்த்தேன். 'அரசு குடியிருப்பு வீட்டில் ஆண்களை அழைத்து வந்து நிர்வாணமாக, ஆபாச படங்களை எடுத்தது தெரிந்தது. என் கணவரிடம் இதுபற்றி கேட்டபோது, என்னையும், என் சகோதரரையும் அடித்தார். ஏற்கனவே, தன்னை ஒரு 'திருநங்கை' என்றே என் கணவர் கூறிக் கொள்வார்' என தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட வருணேஷ், 'என்னை மனதளவில் நெருக்கடிக்குள்ளாக்கி, தற்கொலை முடிவுக்கு தள்ளிவிட்டு, என் சொத்துகளை அபகரிப்பதற்காக, கொள்ளைக்காரி போன்று ஷிம்பி மாறி விட்டார். அவரை காதலித்து திருமணம் செய்தது என் தவறு.

சோதனை

'என்னுடைய செல்போனை பறித்துச் சென்று, தவறாக பயன்படுத்தி, 'டீப் பேக்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக போலி வீடியோக்களை உருவாக்கி, என்னை கேவலப்படுத்தி வருகிறார்,' என்றார். எனினும், ஷிம்பி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், டாக்டர் வருணேஷின் அரசு குடியிருப்பு வீட்டில் அதிரடி சோதனை செய்து சில ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்தது தொடர்பாகவும், அந்த வீடியோக்களும், படங்களும் உண்மையானது தானா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ