உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காரை தாக்கிய காட்டு யானை: 4 பேர் உயிர் தப்பினர்!

காரை தாக்கிய காட்டு யானை: 4 பேர் உயிர் தப்பினர்!

கூடலூர்: கூடலூரில் காரை காட்டு யானை தாக்கியது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலை சாலை முதல் மைல் அருகே, தனியார் பள்ளியை ஒட்டிய தனியார் இடத்தில், இன்று காலை காட்டு யானை முகாமிட்டது. வனத்துறையினர் விரட்டினர். அங்கிருந்து தேவர்சோலை சாலைக்கு வந்த காட்டு யானை, சாலையில் வந்து கொண்டிருந்த, காரை தாக்கி, விட்டு குடியிருப்பு வழியாக சென்றது. சம்பவத்தில் கார் சேதமடைந்தது. அதில் பயணித்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிர் தப்பினர்.இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

VSMani
ஜூலை 05, 2025 16:56

காரை ஆட்டு யானை உடைக்கும்போது காருக்குள் இருந்தவர்களின் மனா நிலை எப்படி இருந்திருக்கும். பயம் திகில் நடுக்கம்