உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டு யானை பிடிக்கும் பணி துவக்கம்

காட்டு யானை பிடிக்கும் பணி துவக்கம்

ஹாசன்: அர்ஜுனா யானை மரணத்தால் நிறுத்தப்பட்ட, காட்டு யானை பிடிக்கும் பணி, நேற்று மீண்டும் துவங்கியுள்ளது.ஹாசன் சக்லேஷ்பூர் யசலுாரு கிராமத்தில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானையை பிடிக்கும் பணி, கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் துவங்கியது. மைசூரு தசரா ஊர்வலத்தின் சாமுண்டீஸ்வரி தேவியை எட்டு முறை சுமந்த அர்ஜுனா யானை தலைமையில், காட்டு யானையை பிடிக்கும் பணியில், கும்கிகள் ஈடுபட்டன.கடந்த மாதம் 4ம் தேதி, காட்டு யானையும், அர்ஜுனா யானையும் நேருக்கு நேர் மோதின. இந்த மோதலில் அர்ஜுனாவை, காட்டு யானை தந்தத்தால் குத்திக் கொன்றது. அர்ஜுனாவின் மறைவு கர்நாடகா முழுதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காட்டு யானையை பிடிக்கும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.அர்ஜுனாவுடன் வந்த மற்ற கும்கிகள், முகாம்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்நிலையில், ஹாசன் பேலுார் மட்டவார் கிராமத்தில், ஒற்றை காட்டு யானை, தொல்லை அதிகரித்து உள்ளது. 4ம் தேதி யானை தாக்கியதில், வசந்த் என்பவர் இறந்தார். மறுநாள் அதாவது 5ம் தேதி, யானை தாக்கி பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.அட்டகாசம் செய்யும் யானையை பிடிக்க, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டார். இதையடுத்து காட்டு யானையை பிடிக்கும் பணிக்காக, நேற்று முன்தினம் இரவு ஜம்பு சவாரி ஊர்வலத்தை சுமக்கும் அபிமன்யு, பிரசாந்த், ஹர்ஷா, அஸ்வதாமா, சுக்ரீவா, தனஞ்ஜெயா, பீமா, மகேந்திரா ஆகிய எட்டு யானைகள், பேலுார் பிக்கோடு கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டன.நேற்று முதல் காட்டு யானையை பிடிக்கும், பணி துவங்கியுள்ளது. இம்முறை கும்கிகளின் தலைவனாக, அபிமன்யு யானை செயல்படுகிறது. இந்த யானைகளுக்கு பேலுார் எம்.எல்.ஏ., சுரேஷ், சிறப்பு பூஜை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ