உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐகோர்ட்டுகளுக்கு அதிக விடுப்பு தருவதா? பிரதமரின் ஆலோசகர் பரபரப்பு பேச்சு

ஐகோர்ட்டுகளுக்கு அதிக விடுப்பு தருவதா? பிரதமரின் ஆலோசகர் பரபரப்பு பேச்சு

புதுடில்லி: 'உயர் நீதிமன்றங்களுக்கு அதிக விடுப்பு வழங்கப்படுவதால், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுகிறது' என, பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் முக்கிய உறுப்பினராக இருப்பவர் சஞ்சீவ் சன்யால். இவர், நம் நாட்டின் சட்ட அடித்தளத்தின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்கான கருத்தரங்கில் பங்கேற்றார். மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் பேசிய சஞ்சீவ் சன்யால், உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும் நீண்டகால விடுப்புகள் குறித்து விமர்சித்தார். 'விக்சித் பாரத்' எனப்படும், வளர்ந்த இந்தியாவாக மாற்றுவதற்கான வளர்ச்சிப் பாதைக்கு நீண்டகால விடுப்புகள் தடைக்கற்களாக இருக்கின்றன' என, கருத்து கூறியிருந்தார். இது நீதித்துறையில் இருப்பவர்களை வெகுவாக அதிருப்தி அடைய வைத்துள்ளது. சன்யாலின் இந்த பேச்சு தவறானது என உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஷ் சிங் தற்போது போர்கொடி உயர்த்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

உயர் நீதிமன்றங்களின் விடுமுறை குறித்து முழுதாக தெரியாதவர்களே, தவறான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். விடுமுறை என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது அல்ல. உயர் நீதிமன்றங்களின் விடுமுறை குறித்து புரிந்து பேச வேண்டும். அதற்கு உயர் நீதிமன்றங்களில் வழக்கமான வேலை நாட்களில் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகளின்போது 'மை லார்டு' போன்ற வார்த்தைகள் பயன்படுத்துவது குறித்தும் சன்யால் விமர்சித்திருந்தார். இந்த பழக்கங்கள் தான் நீதித் துறையின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என கூறியிருந்தார். நீண் ட காலமாக நீதிமன்றங்களில் வழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் நிச்சயம் அகற்றப்பட வேண்டியவை என அதற்கு மட்டும் விகாஷ் சிங் ஆதரவு தெரிவித்தார். உச்ச நீதிமன்ற த லைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி வகித்த காலத்தில் கூட, உயர் நீதிமன்றங்களின் விடுப்பு குறித்து சன்யால் விமர்சித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
அக் 02, 2025 12:51

நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்றால் மற்றைய டிபார்ட்மென்டுல்களுக்கும் அதே போல விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்று குரல் எழுப்பாமல் இருப்பது சற்றே வினோதம் .


ராமச்சந்திரன்
அக் 02, 2025 07:33

முற்றிலும் சரி. நீதி மன்றங்கள் வாரத்தில் 6 நாட்கள் இயங்கியாக வேண்டும். கோடைக்கால மற்றும் பண்டிகை விடுமுறைகள் குறைக்கப்படவேண்டும். வக்கீல்கள் ஊதியத்துக்கு கட்டுப்பாடு அவசியம். வாய்தாக்கள் தவிர்க்கப்பட வேண்டும். எந்த வழக்கையுமே ஒரு வருட காலத்திற்குள் முடித்தாக வேண்டும்.


V Venkatachalam
அக் 01, 2025 18:59

நாம் கலியுகத்தில் வாழ்கிறோம். சமாதானமாக வாழ்வது என்பது அரிதாகி விட்டது. கூட்டுக் குடும்பங்கள் காணவில்லை. உறவுகளின் உன்னதம் மறைந்து எல்லாரும் தனி மனிதர்கள் ஆகி விட்டனர். ஆசைகள் கடல் அளவையும் தாண்டி விட்டன. இவ்வளவையும் நீதிமான்கள் கண்கூடாக பார்க்கின்றனர். ஆகவே நாட்டின் நலன் கருதி அவர்களின் விடுமுறை கால அளவை மாற்றியமைப்பது கட்டாயம். வருங்காலத்தில் நல்லதே நடக்கட்டும்.


Santhakumar Srinivasalu
அக் 01, 2025 13:31

வெள்ளைகாரன் நடைமுறையை விட்டு ஞாயிறு மட்டும் விடுமுறையை கொண்டு வந்தால் வழக்குகள் தேக்கம் நீதிமன்றங்களில் வெகுவாக குறையும்!


முக்கிய வீடியோ