கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் அடித்து கொலை
முசாபர்நகர்:கூடுதல் வரதட்சணை கேட்டு, இளம்பெண்ணை அடித்துக் கொன்ற கணவர் குடும்பத்தினரை போலீசார் தேடுகின்றனர். உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டம் பூலத் கிராமத்தைச் சேர்ந்த அனாஸ் மற்றும் ஷாமா, 28, ஆகிய இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த அடுத்த சில மாதங்களில் இருந்தே மேலும், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு, கணவன் அனாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஷாமாவை சித்ரவதை செய்தனர். ஷாமா வீட்டில், 1 லட்சம் ரூபாய் கொடுத்தனர். இந்நிலையில், கணவன் மற்றும் குடும்பத்தினர் செய்த சித்ரவதையில் ஷாமா உயிரிழந்தார். ஷாமாவின் சகோதரர் ஷாவெஸ் கொடுத்த புகார்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அனாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர். ஷாமா உடல், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.