உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் ஹூடாட்மா ஸ்மிருதி மந்திரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆண்களுக்கு பயிற்சி அளித்தால் அவர் வாழ்நாள் முழுவதும் உழைப்பர். பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் போது, அவர் வேலை பார்ப்பதுடன், அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சியையும் உறுதி செய்வர். பெண்கள் தான் மதிப்புகளையும், பாசத்தையும் ஊட்டுகிறார். அவர்களின் பாசத்தில் தான் குழந்தைகள் வளர்கிறார்கள். 12 வயது வரை குழந்தைகள் பெற்றோரின் நிழலில் இருக்கிறார்கள். அது தான் அவர்களின் அடித்தளம் ஆகும். அப்போதுதான் அவர்களின் இயல்பான குணம் உருவாகிறது. வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர்கள் தொலைந்து போனாலும், இந்த அடித்தளத்துக்கு முயற்சி செய்கிறார்கள். இந்த அடித்தளத்தை வலுப்படுத்துவது தான் முக்கியம். இதைத்தான் தாயார்கள் செய்து வருகின்றனர்.ஆண்களுக்கு வழங்கிய திறன்களை பெண்களுக்கும் கடவுள் வழங்கி உள்ளார். ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்யலாம். இதனால், பெண்களை உயர்த்துகிறோம் என்ற ஆணவத்துடன் ஆண்கள் பணியாற்றக்கூடாது. பெண்கள் செய்ய விரும்பும் வேலையை அவர்கள் அனுமதித்து அவர்களை திறமையானவர்களாக மாற்ற ஆண்கள் முயற்சிக்க வேண்டும். பாரம்பரியக் கட்டுப்பாடுகளில் இருந்து அவர்களை விடுவித்து அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளை வழங்க வேண்டும். இன்று பெண்கள் பல துறைகளில் முன்னணியில் உள்ளனர். நாடு வளர்ச்சி அடைய பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பது முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஜூலை 19, 2025 14:07

அப்புறம் பெண்கள் ஓட்டு பாஜகவுக்கு எப்படி கிடைக்கும்?


vivek
ஜூலை 19, 2025 18:01

தமிழ் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.


பேசும் தமிழன்
ஜூலை 19, 2025 12:10

முஸ்லீம் பெண்கள் உட்பட அனைத்து பெண்களையும்..... அவர்களின் அடிமைத்தனத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும்...... பெண்கள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல.... அவர்களும் மனிதர்கள் தான்..... அவர்கள் எல்லாம் அவர்கள் விருப்பம் போல் இருக்க விட வேண்டும்.


Padmasridharan
ஜூலை 19, 2025 05:05

பெண் படகோட்டடிகள் கடலில் இறங்கி மீன் பிடிப்பார்களா. . ஆண்களை போல் முதுகில் மூட்டை தூக்கி வேலை செய்வார்களா. ஆண்களும் பெண்களும் சரிசமமென்பவர்கள் எல்லாத்துறையிலும் 50:50 வேலையில் அமர்த்தலாமே. ஆண் பெண் இருவரும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க புறப்பட்டு பெத்த பிள்ளைகளை பரிதவிக்க வைக்கிறார்கள். இதனால் தற்கொலை, பாலியல் தொல்லைகள் அதிகரித்து உள்ளன சாமி


vivek
ஜூலை 19, 2025 07:39

எல்லாம் தமிழ் நாட்ல நடக்குதுன்னு நேரா சொல்லுங்க பத்மஶ்ரீ சாமி


Savitha
ஜூலை 19, 2025 09:17

மீன் பிடிக்கும் தொழில் செய்யும் பெண்களும் இருக்கிறார்கள், மூட்டை தூக்கும் பெண்களும் இருக்கிறார்கள், ஏன் செய்யும் வேலை எல்லாம் பெண் செய்ய முடியுமா என்று விதண்டாவாதம் எதற்கு? அப்படி ஆரம்பித்தால், பத்து மாதம் வயிற்றில் சுமந்து, உயிர் வலி சகித்து , குழந்தை பெறும் சாத்தியம் ஆணுக்கு இல்லை, இந்த வெட்டி விவாதம் ஏன்? பெண்களை மூட நம்பிக்கை என்ற பெயரில் , அடக்கி ஒடுக்காமல், கல்வி , வேலை வாய்ப்புகளில் உயர்த்துவது பற்றி யோசியுங்கள், வேலை பார்க்கும் பெண்கள் எல்லோரும் அவர்கள் குழந்தைகள், குடும்பத்தையும் பார்த்து கொள்ளும் கடமையையும் செவ்வனே செய்கிறார்கள், அவர்களுக்கு உறுதுணையாக அவர்கள் இல்ல ஆண் மக்கள் இருந்தாலே போதும், அதுவே பெண்களுக்கு தலையாய தேவை, பெண் சுதந்திரம் என்பது பெண்ணின் படிப்பு, வேலை , வாழ்க்கையை பெண்கள் முடிவு செய்யும் தனி உரிமை, அவள் படிக்க வேண்டும் என்பதை அடுத்தவர் முடிவு செய்வது அல்ல . கருத்து போடும் போது , கொஞ்சம் யோசித்து போடுங்கள்.


Savitha
ஜூலை 19, 2025 09:20

தற்கொலை, பாலியல் தொல்லை அதிகரித்தால் ,பெண்ணை வீட்டுக்கு உள்ளேயே பூட்டி வைத்து விடலாம் என்கிறீர்களா? ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதித்து நடக்க வேண்டும் என்று அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய அறிவை கொடுத்து வளருங்கள், பெண் பிள்ளைகளை கற்காலத்திற்கு இட்டு செல்லும் வேலையை விடுங்கள்.


தாமரை மலர்கிறது
ஜூலை 19, 2025 00:58

பெண்ணை குழந்தை பெற்றெடுக்கும் வெறும் மெஷினாக இந்தியாவில் ஒரு கும்பல் போர்த்தி வைத்திருக்கிறது. விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. கல்வி மற்றும் வேலை செய்ய அனைத்து பெண்களுக்கும் சுதந்திரம் கொடுக்கப்படவேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 18, 2025 21:35

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை