உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா முன்னேறுவதை உலக வல்லரசுகள் விரும்பவில்லை: மோகன் பாகவத்

இந்தியா முன்னேறுவதை உலக வல்லரசுகள் விரும்பவில்லை: மோகன் பாகவத்

மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: 2047 ல் வளர்ந்த இந்தியா என பேசுகிறோம். நமக்கு 2047 ம் ஆண்டு காலக்கெடுவை அளித்துள்ளது. நமது லட்சியத்தை அடைவதற்கான காலம் நெருங்குவதை எடுத்துக் காட்டுகிறது.வளர்ந்த நாடுகள், நம்மிடம் ' எப்படி வாழ வேண்டும்,' என சொல்லிக் கொடுக்கிறது. ஆனால், வளர்ச்சிக்கான அடையாளத்தை இந்தியா வரையறுக்கிறது. 2047 ம் ஆண்டுக்குள் வளர்ந்த அமெரிக்கா, வளர்ந்த சீனா, வளர்ந்த ரஷ்யாவோ தேவையில்லை. நமக்கு வளர்ந்த இந்தியாவே தேவை. இது வளர்ச்சிக்கான சரியான புரிதலை நமக்கு அளிக்கிறது.வலிமையானவை மட்டுமே பிழைத்து இருக்கும் என உலக வல்லரசுகள் நினைக்கின்றன. இதனால், இந்தியா முன்னேறுவதை அவை விரும்பவில்லை. ஆனால், நம்மை வெறுக்கும் நாடுகளுக்கு கூட உதவ இந்தியா விரும்புகிறது. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ