வாசகர்கள் கருத்துகள் ( 2 )
விசா இல்லாமலா அல்லது visa on arrival ஆ ?
அருமை.
லண்டன்: ஹென்லே நிறுவனத்தின் 2025ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஹென்லே ஆய்வு நிறுவனம் 2006 முதல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் 199 நாடுகள் இடம்பெறும். ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வாயிலாக விசா இல்லாமல் பயணிக்கக் கூடிய நாடுகளின் எண்ணிக்கையை வைத்து இந்த தரவரிசை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசையை ஹென்லே நிறுவனம் நேற்று வெளியிட்டது. கடந்தாண்டு, 85வது இடத்தில் இருந்த இந்தியா, 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நம் நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உட்பட 59 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். நம் அண்டை நாடான சீனா 34வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இரண்டாவது இடத்தில் ஜப்பான், தென் கொரியா உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுக்கு 190 நாடுகள் விசா இன்றி பயணிக்க அனுமதி தருகின்றன. மூன்றாவது இடத்தை ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஏழு நாடுகள் பகிர்ந்துகொண்டுள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். அமெரிக்கா இந்தாண்டுக்கான பட்டியலில் ஒரு இடம் சரிந்து 10வது இடம் பிடித்துள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் 182 நாடுகளுக்கு விசா எடுக்க தேவையில்லை. இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
விசா இல்லாமலா அல்லது visa on arrival ஆ ?
அருமை.