உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகளவில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள்!

உலகளவில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள்!

புதுடில்லி: உலகநாடுகளில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள் எவை என்ற விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. சர்வதேச நாடுகளையே இந்த புள்ளி விவரங்கள் மலைக்க வைத்துள்ளன.உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 நாடுகளில் 3.43 கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சரிபாதியாக இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்களும் (1,71,81,071 பேர்) வெளிநாடு வாழ் இந்தியர்களும் (1,71,75,122 பேர்) உள்ளனர்.வேலைவாய்ப்பு, பொருளாதார தேவைகளுக்காக உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் இந்தியர்கள் சென்று வருகின்றனர். லட்சக்கணக்கானோர் பரவி இருந்தாலும் பெரும்பாலோனாரின் விருப்பம் என்பது அமெரிக்காவாக தான் இருக்கிறது.எந்த நாடுகளில் அதிக இந்தியர்கள் வசிக்கின்றனர் என்ற புள்ளி விவரங்களும் வெளியாகி இருக்கிறது.புலம்பெயர்ந்த இந்தியர்கள் அதிகம் வசிக்கும் டாப் 10 நாடுகள்; அமெரிக்கா - 56. 9 லட்சம் பேர் ஐக்கிய அரபு அமீரகம் - 38.9 லட்சம் பேர் சவூதி அரேபியா - 27.5 லட்சம் பேர் மலேசியா - 29.3 லட்சம் பேர் இலங்கை - 16.1 லட்சம் பேர் தென் ஆப்பிரிக்கா - 13.9 லட்சம் பேர் பிரிட்டன் - 13.4 லட்சம் பேர் கனடா - 36.1 லட்சம் பேர்குவைத் - 10.1 லட்சம் பேர்சிங்கப்பூர் - 4.6 லட்சம் பேர் மேற்கண்ட 10 நாடுகளில் வளைகுடா நாடுகளில் (ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் குவைத்) வசிக்கும் புலம்பெயர் இந்தியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை என்பது 76.5 லட்சம் ஆகும் (கிட்டத்தட்ட முக்கால் கோடி இந்தியர்கள்). இதுவே மேற்கத்திய நாடுகளில் (கனடா, அமெரிக்கா,பிரிட்டன்) 66 லட்சம் பேராக உள்ளது. இவர்கள் அனைவரும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர். இது உலகளவில் மற்ற நாடுகளில் வசிக்கும் ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த பூர்வீக இந்தியர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதம் (1.71 கோடி) ஆகும். இந்த நாடுகளை தவிர டிரினிடாட் மற்றும் டொபாகோவில் 5.4 லட்சம் பேரும், கயானாவில் 3.2 லட்சம் பேரும் உள்ளனர். இந்தியர்கள் பெரும்பாலும் வசிக்கும் லண்டன், சிட்னி, கோலாலம்பூர், ஜோகன்னஸ்பர்க், பெர்லின், பீஜிங், டோக்கியா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 38 இந்திய கலாசார உறவுக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.ரஷ்யாவில் அதிக புலம்பெயர் இந்தியர்கள் வசித்து வந்தாலும் அந்நாட்டில் மட்டும் இந்திய கலாசார உறவுக்குழுக்கள் அமைக்கப்படவில்லை. இந்தியர்கள் அதிகம் குடியேறி அவர்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக இருக்கும் 7 நாடுகளில் சர்வதேச அளவில் இந்தியர்களின் வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் வெளியுறவு அமைச்சகம் கையெழுத்திட்டு இருக்கிறது.2024-25 நிதியாண்டில் மட்டும் வெளிநாடுகளில் இருக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்கள், தங்களின் வருவாயில் 135.46 பில்லியன் அமெரிக்க டாலர்களை வீடுகளுக்கு அனுப்பி இருக்கின்றனர். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 14 சதவீதத்திற்கும் அதிகம் என்று ரிசர்வ் வங்கி தரவு வெளியிட்டு இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

என்றும் இந்தியன்
செப் 02, 2025 16:54

புலம் பெயர்ந்த இந்தியர்கள் என்றால் அவர்கள் அந்த நாட்டின் குடிமகன்கள் தானே இந்திய குடி மகன்கள் அல்லவே???பணம் அனுப்புதல் உறவினர்களுக்கு எல்லாம் ஓகே வீடு கூட வாங்கி வைத்திருப்பார்கள்???அவர்கள் இங்கு திரும்பி வருவார்களா???அப்போ அவர்கள் இந்தியர்கள் அல்லவே அல்ல???மொரிஷியஸ் பிரதமர் இந்திய வழித்தோன்றல் தான் அவர் கூட இந்தியரல்லர்???அயல்நாட்டிற்கு சென்றவர்கள் retire ஆனவுடன் திரும்பி வருவார்கள் என்றால் அவர்கள் இந்தியரே??இல்லையென்றால் அவர்கள் அந்த நாட்டினர் தான் ஆனால் இந்திய வழித்தோன்றல் மொரிஷியஸ் பிரதமர் போல அவ்வளவு தான்.


Moorthy
செப் 02, 2025 16:52

டிரம்ப் 50% வரி போட்டது சரிதான்


Lakshmanan
செப் 02, 2025 12:23

மதுரை பாண்டி காரங்க எவ்ளோவ்


Ramesh Sargam
செப் 02, 2025 11:20

வெளிநாடுகளில் குடியேறி அங்கேயே வசிக்கும் இந்தியர்களால் அந்த நாடுகளுக்கு ஒருசில சிறிய பிரச்சினைகளை தவிர்த்து மற்றபடி நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு இத்தாலி குடும்பத்தினர் இந்தியாவில் குடியேறி, காங்கிரஸ் என்கிற கட்சியில் இருந்துகொண்டு இந்தியாவை என்ன பாடுபடுத்துகிறார்கள்... அப்பப்பா சொல்லிமுடியாது அவர்கள் படுத்தும் பாட்டை.


நாஞ்சில் நாடோடி
செப் 02, 2025 13:16

ஸ்ரீ லங்காவில் ஒன்றரை லட்சம் தமிழர்களை காவு வாங்கிய ...


என்றும் இந்தியன்
செப் 02, 2025 16:42

Excellent Derivative of the word


இளந்திரயன், வேலந்தாவளம்
செப் 02, 2025 10:05

மொரீஷியஸ் பிரமராக இருப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்... மொரிஷியஸ் விட்டுப்போய் உள்ளது


ராஜ்
செப் 02, 2025 09:56

ஜெர்மனியில் 100 உபிங்க இருக்காங்க அவங்களை மட்டும் நாம பார்த்தோம் விடியல் கருத்து அரங்கில் அவர் கருத்தையும் கேட்க வந்து இருக்காங்க ன்னு அவங்க எவ்வளவு பெரிய உபி யா இருப்பாங்க


Ravichandran Ganesan
செப் 02, 2025 09:33

ஆஸ்திரேலியா பற்றிய தகவல் இல்லை


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 02, 2025 09:24

இந்த இந்தியர்களில் தமிழர்கள் எவ்வளவு பேர் ? இந்த லிஸ்டில் ஜெர்மனி இடம்பெறவில்லையே. அப்போ ஆள் இல்லாத ஊருல டீக்கடையா


Tamilan
செப் 02, 2025 09:24

கருப்புப்பண கார்போரேட்டு கொள்ளையர்களை காக்கும் முயற்சி


Tamilan
செப் 02, 2025 09:23

இப்படி மெகா கார்போரேட்டு கொள்ளையர்களை காக்க சாதாரண இந்தியர்களின் பெயரை துஸ்பிரயோகம் செய்து புரளியை கிளப்புவதால்தான் பல நாடுகள் அப்பாவி இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கின்றன


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 02, 2025 09:56

இதில் எங்கே புரளியை கிளப்பினார்கள். புலம் பெயர்ந்த இந்தியர்கள் எண்ணிக்கை தானே இங்கு கூறியுள்ளார்கள். எங்கே எவ்வளவு பேர் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர் என்று தெரிந்தால் தானே அவசர காலங்களில் அவர்களுக்கு உதவ முடியும். இந்தியர்கள் என்பதில் நீங்கள் உங்கள் பெயராக மட்டுமே வைத்துள்ள தமிழர்களும் உள்ளனர். பாகிஸ்தானியர் யாரும் இல்லை. ஏனெனில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லை. புலம் பெயர்ந்த பாக்கிஸ்தானியர் எவ்வளவு என்று பாகிஸ்தான் அரசு தான் கூற வேண்டும். அது இந்தியர்கள் விட குறைவாக இருந்தால் இந்தியர்கள் அதற்கு பொறுப்பு அல்ல. பாகிஸ்தான் இன்னமும் மதம் என்ற பெயரில் பழமைவாத சிந்தனைகள் கொண்டு உள்ளதால் அவர்களால் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். போலி மதச்சார்பின்மை ஜாதி மத பேதம் பார்க்கும் திராவிட மாடல் கட்சிகள் மட்டும் இங்கு இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்தின் பங்கு மற்ற மாநிலங்கள் விட இன்னும் அதிகமாக இருக்கும். திராவிட மாடலும் வெளி நாடுகளில் முதலீடு செய்துள்ளது கருப்பை வெள்ளையாக்க.


Sudarsan Ragavendran
செப் 02, 2025 13:50

செய்தியை நன்றாக படித்துவிட்டு, செய்தியின் சாரத்தை உள்வாங்கிக்கொண்டு கருத்து எழுதவும் அது பழக்கமில்லை என்றல் பழகிக்கொள்ளவும்


புதிய வீடியோ