மேலும் செய்திகள்
ஆவின் நிறுவன 'எக்ஸ்' பக்கம் சீரமைப்பு
18-Aug-2025
புதுடில்லி: 'இந்தியாவை பிரிக்க வேண்டும்' என, சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஆஸ்திரிய பொருளாதார நிபுணரின் பக்கத்தை மத்திய அரசு முடக்கியது. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் பொருளாதார நிபுணரான பெஹ்லிங்கர் ஜான், தன், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், காலிஸ் தான் வரைபடத்தை இணைத்து, 'இந்தியாவை பிரிக்க வேண்டும். 'இந்தியாவை பிரித்து, 'எக் ஸ் இந்தியா'வாக மாற்ற நான் அழைப்பு விடுக்கிறேன். இந்திய பிரதமர் மோடி ரஷ்ய மனிதர். காலிஸ்தானின் சுதந்திரத்துக்கு நண்பர்கள் தேவை' என, பதிவிட்டு இருந்தார். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் துரிதமாக செயல்பட்டு, பெஹ்லிங்கரின் சமூக வலைதள பக்கத்தை இந்தியாவில் முடக்கும்படி, 'எக்ஸ்' சமூக வலைதளத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அவரின் வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பெஹ்லிங்கர் ஜான், உக்ரைன், கொசோவா, போஸ்னியா மற்றும் ஆஸ்திரியாவின் நேட்டோ உறுப்பினர் பதவிக்கான ஆஸ்திரிய குழுவின் தலைவராக பணியாற்றுகிறார். தெற்கு பால்கன் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்புக்கான குழுவிலும் இருக்கிறார். பெஹ்லிங்கர் குறித்து ஆஸ்திரிய அரசிடம், வெளியுறவு துறை கேள்வி எழுப்புமா என்றதற்கு, அத்துறைக்கான மூத்த அதிகாரி கூறுகையில், 'அவர் எந்தவொரு அதிகாரப்பூர்வமான பதவியிலும் இல்லாத போது, முட்டாள்தனமான அவருடைய பதிவுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை' என, தெரிவித்தார்.
18-Aug-2025