இளைஞர்கள் போராட உரிமை உள்ளது!
ஜனநாயகத்தில் போராட்டம் என்பதும் பேச்சின் ஒரு வடிவம் தான். இளைஞர்களின் நியாயமான ஆதங்கங்களை புரிந்து கொண்டு அவர்களிடம் பேச்சு நடத்த வேண்டும். பழைய தலைமுறையினர் அதிகாரத்தில் இருந்தவர்களை கேள்வி கேட்டதில்லை; ஆனால், இன்றைய இளைஞர்கள் கேள்வி கேட்கின்றனர். அன்பான முறையில் தர்க்க ரீதியிலான பதில்களை எதிர்பார்க்கின்றனர். இளைஞர்கள் கேள்வி எழுப்புவதை தேசத்திற்கு எதிரான செயலாக பார்க்கக் கூடாது. இன்றைய இளைஞர்கள் நேர்மையாக இருக்கின்றனர். அதனால், அவர்களை நான் கண்மூடித்தனமாக நம்புகிறேன். அதே சமயம், சமீபத்தில் நடந்த மாணவர் போராட்டங்களில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனவே, உண்மை நிலை தெரியாமல், அந்த போராட்டம் குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது. மோகன் பாகவத் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்