உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்

இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இளம் தலைமுறை கேள்விகளை கேட்கிறது. நாம் அவர்களுக்கு அதற்கான காரணத்தை விளக்க வேண்டும்'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தி உள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: நாங்கள் இளைஞர்களாக இருநத காலத்தில் அது கீழ்ப்படிதலின் காலமாக இருந்தது. இப்போதெல்லாம் அப்படி இல்லை. புதிய இளம் தலை முறையினர் கேள்வி கேட்கிறது.இளம் தலைமுறை கேள்விகளை கேட்கிறது. நாம் அவர்களுக்கு அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். நாம் அவர்கள் மீது மிகுந்த பாசம் காட்ட வேண்டும். அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும். இப்போதெல்லாம் குடும்பங்களுக்குள்ளேயே கூட உரையாடல் நின்றுவிட்டது. குழந்தைகள் அறிவுறுத்தல்களை விட நடத்தை மூலமே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் அளிக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். முன்மாதிரியாக திகழ வேண்டும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜூலை 25, 2026 20:07

அந்தக் கூட்டத்தில் இவர் ஒருவர் பேச்சு மட்டுமே இந்த விஷயத்தில் பொறுப்புள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது!


guna
ஜூலை 25, 2026 23:43

வீணா போன வேணுவுக்கு மட்டும் புரியுது


Rathna
ஜூலை 25, 2026 12:09

1 இந்தியாவில் பல போராட்டங்கள் - விவசாயிகள், மாணவர்கள், காலிஸ்தானிகள், அமைதி வழி சமூக போராட்டங்கள் பல தீவிரவாத நாடுகளிடம் இருந்து பணம் பெற்று நடத்தப்படுவது வேதனை. 2 இதற்கான பணம் அமெரிக்கா மதமாற்ற NGO கள், பாக்கிஸ்தான், சவூதி, கத்தார், சீனா போன்ற நாடுகளில் இருந்து வருகிறது. 3 ஹவாலா மூலம் இது வரை மூலம் வந்த பணம் இப்போது, ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற இணைய தளங்கள் மூலம் கத்தார், அரேபியா நாடுகளில் இருந்து உணவு இலவச ஆர்டர் செய்யப்பட்டு, போராட்ட களத்தில் டெலிவரி செய்யப்படுகிறது. 4 இந்திய வளர்ச்சியை பிடிக்காத பல ஏகாதிபத்திய நாடுகள், உள்ளூர் அரசியல் சக்திகள் துணையுடன் சேர்ந்து இதை நடந்துகின்றன. 5 இதில் உள்ளூர் மற்றும் பக்கத்து மாநில தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சக்திகள் தினமும் பணம் என்ற அடிப்படையில் பணி அமர்த்தப்படுகிறார்கள். 6 இது போன்ற சம்பவங்களில் மத்திய அரசின் தூக்கம் பிரச்சனைகளை பெரிது ஆக்குகிறது. நீட் பிரச்சனையில் இப்போது உள்ள நடவடிக்கையை 3 மாதத்திற்கு முன்னால் எடுத்து இருந்தால், பிரச்சனை இந்த அளவு தலை தூக்கி இருக்காது.


சமீபத்திய செய்தி