உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்ம விருது பெற்ற சாமியார் மீது இளம் பெண் பாலியல் புகார்

பத்ம விருது பெற்ற சாமியார் மீது இளம் பெண் பாலியல் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், பத்ம ஸ்ரீ விருது பெற்ற சாமியார் ஒருவர், இளம்பெண்ணை ஆறு மாதத்தில் 12 முறை பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் பாரத் சேவாஸ்ரம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் கார்த்திக் மஹாராஜ். இவர், நாட்டின், நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை சமீபத்தில் பெற்றார். இந்நிலையில், ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்த பெண் முர்ஷிதாபாத் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: ஆசிரம வளாகத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி சாமியார் என்னை ஆசிரமத்தில் தங்க வைத்தார். நான் தங்கியிருந்த அறைக்கு வந்த அவர் என்னை பலாத்காரம் செய்தார். இவ்வாறு கடந்த 2013 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதத்தில் 12 முறை பலாத்காரம் செய்தார். அவர் பா.ஜ.,வுக்கு நெருக்கமானவர் என்பதால் பயத்தில் நான் புகார் அளிக்கவில்லை. மேலும் போலீசில் புகார் அளித்தால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார். என்னை பலாத்காரம் செய்த கார்த்திக் மஹாராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புகாரின்படி சாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில் தன் மீதான புகாரை சாமியார் கார்த்திக் மஹாராஜ் மறுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜூன் 29, 2025 14:52

ஒன்றை மறக்கடிக்க இன்னொரு...


Selliah Ravi Chandran
ஜூன் 29, 2025 13:13

Now this is fashion.women need lots of money file case from sexual abuse case.were they went before this is all


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 11:39

பாலியலுக்கு இந்த கட்சிக்கும் அப்படி என்ன தான் சம்பந்தமோ தெரியவில்லை ரொம்போ "கை"ராசியான கட்சி அடைக்கலம்னா இப்படி ஒரு அடைக்கலம் கொடுக்கும் கட்சி ..... சூப்பரப்பு


venugopal s
ஜூன் 29, 2025 11:29

பாஜக ஆட்சியில் இப்படிப் பட்டவர்களுக்கு மட்டுமே பத்ம விருதுகள் கிடைக்கிறது!


Padmasridharan
ஜூன் 29, 2025 07:43

அரசியலுக்கு நெருக்கமானவரென்று பயப்படவில்லை பள்ளியில் வேலை கிடைக்காமல் போய்விடுமென்றுதான் இருக்கும்.


Rajan A
ஜூன் 29, 2025 05:15

பாஜாகவுக்கு நெருக்கமானவர். உடனே விசாரணை, வழக்கு, கைது தான். தீதியின் ஆட்சியில் நீதி - ஆர்ஸ்பி மீடியா பிரசாரம் தொடங்கி விடும். ஆமாம், அது என்ன 12 வருடங்கள் கழித்து புகார்? எல்லாம் டைவர்ஷன் ஆக்க்ஷன்


Manaimaran
ஜூன் 29, 2025 03:33

இது நாள் வரை தூங்குனயா இவளளை கைது செய்யனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை