உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருமான பகிர்வுக்கு புதிய நிபந்தனைகள்; விதித்தது யூடியூப் நிறுவனம்

வருமான பகிர்வுக்கு புதிய நிபந்தனைகள்; விதித்தது யூடியூப் நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்கு புதிய நிபந்தனைகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கடைசி ஓராண்டில் குறைந்தது 8 ஆயிரம் மணி நேரம் வீடியோ பார்வை அல்லது கடைசி 90 நாட்களில் 2 கோடி ஷார்ட்ஸ் பார்வை இருந்தால் மட்டுமே, வருவாய் பகிர்வு அளிக்கப்படும் எனக்கூறியுள்ளது. 2027 பிப்ரவரி முதல் புதிய விதி அமலாக உள்ளது.இன்றைய காலகட்டத்தில் யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் ஏராளமானோருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி யூடியூப் சேனல்கள் துவக்கி வீடியோ பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். குறிப்பிட்ட பார்வையாளர்களை பெறும் சேனல்களுக்கு யூடியூப் நிறுவனம் பணம் வழங்கி வருகிறது. இதனால், யூடியூப்பில் வீடியோ போடுவதையே நிறைய பேர் முழு நேர வேலையாக செய்து வருகின்றனர்.இந்நிலையில் யூடியூப் நிறுவனம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, யூடியூபில் வருமானம் ஈட்டுவதற்கு, கடைசி ஓராண்டில் 8 ஆயிரம் மணி நேரம் பார்வை மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு 90 நாட்களில் 2 கோடி பார்வைகள் வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.( முன்பு இது 4 ஆயிரம் மணி நேரம் பார்வை மற்றும் ஷார்ட் வீடியோக்களுக்கு 90 நாட்களில் ஒரு கோடி பார்வைகள் பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. தற்போது இதனை இரட்டிப்பு ஆக்கப்பட்டு உள்ளது).அதேநேரத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் சந்தாதாரர்கள் இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்படவில்லை.ஷாட்ஸ் வீடியோக்கள் வாயிலாக தொடர்ச்சியான விளம்பர வருமானம் பெறுவதற்கு 90 நாட்களில் 1 கோடி பார்வைகளை தக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் 2027 பிப்.,01 முதல் அமலுக்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Haja Kuthubdeen
ஆக 12, 2026 10:24

சுத்தமா பணமே கொடுக்க கூடாது..அவனவன் கேமராவும் கையுமா அலையுறானுங்க.


Naren Samy
ஆக 11, 2026 22:28

அத செய்யுங்கள் முதல்ல ......


theruvasagan
ஆக 11, 2026 22:05

இன்னும் கூட கடுமையாக்கப்படணும். ஊர்ல இருக்கிற வெட்டி பயலுவ ரீல்ஸ் போடறேன் பேர்வழின்னு கண்ட கண்ட கருமத்தை எல்லாம் போட்டு நாறடிப்பது குறையும்.


rama adhavan
ஆக 11, 2026 21:33

அப்பாடி இப்படியாவது ரீல்ஸ் பைத்தியங்கள் குறைந்தால் மகிழ்ச்சி தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை