தன்னார்வ தொண்டில் இளைய தலைமுறையினர்
பலவிதமான சமூக சேவை தொடர்பான பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் பணியின் மூலம் ஒருமித்த எண்ணம் கொண்ட நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைப்பதாகவும், தங்களின் செயல்களால் விளையும் மாற்றத்தினைக் கண்டு மகிழ்ச்சியும் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். சமூகத்தில் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் நபர்களின் நன்மைகளுக்காக பணிபுரியும் பலவித அமைப்புகளுடன், இணைந்து பணியாற்றுவதில், பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மற்றும் பெரியளவிலான பணிகளில் இருக்கும் இளையதலைமுறையினர் விரும்புகின்றனர். மேலும், சமூகம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள சிலர் தங்களின் சொந்த முயற்சியில் நிறுவனங்களையும் ஏற்படுத்துகின்றனர். வெகுமதிகள் ஒரு ஆதரவற்ற குழந்தையைக் கட்டியணைத்தல் மற்றும் தேவையானவர்களுக்கு அவசியமான உதவிகளை செய்தல் போன்றவை சிறப்பான மனமகிழ்ச்சியைத் தருகின்றன. மேலும் இதுபோன்ற பணிகள் வாழ்விற்கு சிறந்த மானுட அனுபவத்தையும் தருகிறது. இதுபோன்ற அரசு சாரா அமைப்புகளில் பணியாற்றுவதானது, நேரம் தவறாமை, சரியான நேரத்திற்கு சரியானபடி இயங்குதல் மற்றும் சிறந்த அமைப்பு முறையாக்கம் போன்ற பல அம்சங்களைக் கற்றுத் தருவதாக இளைய தலைமுறையினர் கூறுகின்றனர். அதேசமயம், எந்த சேவை அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது என்பதை தேர்ந்தெடுத்து பணிபுரியும் மனப்பாங்கையும் அவர்கள் பெற்றுள்ளனர். இளைய தலைமுறையினர் இத்தகைய சேவைகளின் மூலமாக ஆத்ம திருப்தியை அடைந்தாலும், தனிப்பட்ட சில காரணங்களுக்காகவும் அவர்கள் இத்தகைய சேவைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் இத்தகைய சேவை செயல்கள் அவர்களின் பயோடேட்டாவில்(CVs) கூடுதல் தகுதியை சேர்க்கின்றன. இதன்மூலம் அவர்கள் சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் எளிதாக இடம்பிடிக்கும் சாத்தியமும் உள்ளது. ஒருவரின் விருப்பத்தை அளவிடுதல் இந்தியாவில் இன்றைக்கு இருக்கும் சமூக சூழலில், இதுபோன்ற இளைய சேவையாளர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இந்த சேவையாளர்கள் தங்களுக்கு பொருத்தமான சேவை அமைப்புகளை அடையாளம் கண்டு அதில் இணைவது எளிதாக இருக்கிறது. iVolunteer போன்ற ஏஜென்சிகள் இதற்கு பெரிதும் உதவுகின்றன. சமூக சேவையில் ஈடுபட விரும்பும் இளைஞர், தனக்கு எதில் ஆர்வம் என்பதை நன்கு யோசித்துவிட்டு, பின்னர் களமிறங்க வேண்டும். இசை மற்றும் கலாச்சாரம் போன்ற விஷயங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதிலும் இத்தகைய சேவை அமைப்புகள் பணிபுரிகின்றன. எனவே, இந்த 2 துறைகளிலும் ஆர்வமுள்ள இளையதலைமுறையினருக்கு இதுவும் ஒரு நல்ல வாய்ப்பு. இத்தகைய சேவை அமைப்புகளில்(Non governmental organisations) பல ஆண்டுகளாக தன்னார்வத்துடன் பணிபுரிந்து வருபவர்கள், புதிதாக வருபவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். இத்தகையப் தன்னார்வ சேவைப் பணிகளை, வெளிநாடுகளில் மேற்கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. ஏனெனில், பல சேவை நிறுவனங்கள், மேற்கூறிய பணிகளை வெளிநாடுகளில் மேற்கொள்ள ஆர்வமுள்ள சேவையாளர்களை எதிர்பார்க்கின்றன. அர்ப்பணிப்பே முக்கியம் வெளிநாடுகளில் இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு புதிய அனுபவம் பெற பல இந்தியர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் சிலர், பல்வேறு காரணங்களுக்காக இடையிலேயே தங்களின் பணியை விட்டுவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில், கடும் உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும், புத்தாக்க முயற்சிகளும் குறைவாக இருப்பதுதான். இந்தப் பிரச்சினை தன்னார்வ தொண்டர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை பணிக்கு அமர்த்தும் சேவை நிறுவனங்களிடமும் இருக்கிறது. தன்னார்வ தொண்டர்கள், அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகளாகவும், தூதர்களாகவும் இருக்கிறார்கள் என்பது இந்த இடத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். எனவே, அவர்கள் பல விஷயங்களை புதிய முறையில், வித்தியாசமாகப் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். பணியின் மீது அதீத ஆர்வமிருந்தால், இதுபோன்ற அம்சங்கள் ஒருவருக்கு தானாகவே வரும். எனவே, நானும் சமூகத்திற்கு சேவை செய்யப் போகிறேன் என்று ஒருவர் பெருமைக்காக புறப்படுவது முக்கியமல்ல, அப்பணியில் உண்மையிலேயே ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் இருப்பதோடு, அதில் இருக்கும் நடைமுறை சவால்கள் பற்றிய புரிதலும் அவசியம் இருத்தல் வேண்டும். உங்களுக்கு Volunteering வாய்ப்பை அளிக்கும் இந்திய அளவிலான சில நிறுவனங்கள் SPIC MACAYwww.spicmacay.com Janaagrahawww.janaagraha.org SICHREMwww.sichrem.org CRYwww.cry.org Dream A Dreamwww.dreamadream.org The Akanksha Foundationwww.akanksha.org Ekta Parishadwww.ektaparishad.com Give Indiawww.giveindia.org The Make A Wish Foundationwww.makeawishindia.org The Spastics Society of Indiawww.nrcissi.org நீங்கள் தன்னார்வ சேவையில் ஈடுபட உதவிபுரியும் சில நிறுவனங்களில் வலைத்தளங்கள் www.ivolunteer.in http://ngopost.org/ http://challengesworldwide.com/