தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி
பெரும்பாலும் கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளுக்கு இப்போதெல்லாம் தவில், நாதஸ்வர இசைக் கலைஞர்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. வெகு நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் தான் கிடைக்கும் என்ற நிலை வந்துவிட்டது. காரணம் இந்த கலையில் பயிற்சி பெற்ற இசைக் கலைஞர்கள் குறைவாக இருப்பதேயாகும். இந்நிலையில் புதுச்சேரியில் பாரதியார் பல்கலைக் கூடத்தில் தவில், நாதஸ்வர இசையில் 3 ஆண்டு டிப்ளமோ வகுப்பு நடந்து வருகிறது. இதில் சேருவதற்கு 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். ஒரு குருவிடம் நேரடியாக சென்று 5 ஆண்டுகள் படிக்கும் இந்தப் பயிற்சியை இங்கு 3 ஆண்டுகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் இசையில் ஆர்வமாகத் தான் இருக்கின்றனர் என்று பாரதியார் பல்கலைக் கூடத்தின் இசைத் தலைவர் வி.எஸ் பாலமுரளி கூறுகிறார். புதுச்சேரியில் பாரதியார் பல்கைக் கூடத்தில் தான் வாசிப்பு என்ற தனித்துவமுள்ள இந்தப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த டிப்ளமோ படிப்பில் தாள வகைகள், சொற்கட்டுகள், தவிலில் பயிற்சி பெறுதல் உள்ளிட்ட 3 விதமாகப் பயிற்சியளிக்கப்படுகிறது என பல்கலை தவில் விரிவுரையாளர் பொன். சண்முகம் தெரிவித்தார். இங்கு முறையான பாடத்திட்டம் அமைக்கப்பட்டு முழுநேரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மகா வித்வான்களுக்கு இணையாக இங்கு படிக்கும் மாணவர்களைத் தயார் செய்கின்றனர். மேலும் விவரங்கள் அறிய: bpk.puducherry.gov.in பாரதியார் பல்கலைக்கூடம்,புதுச்சேரி பிரதான சாலை,அரியங்குப்பம், புதுச்சேரி - 605 007.தொலைபேசி 0431-2600642இ 2600935 பொன். சண்முகம், தவில் விரிவுரையாளர் - 9345427894வி.எஸ். பாலமுரளி, இசை துறை தலைவர் - 9487981121