உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டில் படிக்க விருப்பமா? (7)

சென்ற வாரம் வெளிநாட்டுக்கு சென்று படிப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை பார்த்தோம். இதற்கான காரணங்கள் சில காரணங்களை இந்த வாரம் பார்க்கலாம்.1. இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் வேலை தேட முடியும்.2. வெளிநாட்டில் படித்த மணமகன்களுக்கு மதிப்பு அதிகம்.3. தொழில்மயமாக்கல் காரணமாக சர்வதேச அளவில் தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்த, நிர்வாக திறன் பெற்றவர்களுக்கான தேவை உருவாகியுள்ளது.4. வசதி இருந்தும் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர முடியாதவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.5. வெளிநாடுவாழ் இந்தியர்கள், இங்கிருக்கும் தங்களது உறவினர்களுக்கு வெளிநாடுகளுக்கு வந்து படிக்க உதவுகின்றனர்.6. அரசின் புதிய கொள்கைகள் அன்னிய செலாவணியை மாற்றுவதை எளிதாக்கியுள்ளது.7. வெளிநாட்டில் படிக்க செல்லும் அளவுக்கு நடுத்தர வர்க்கத்தினரிடம் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது.8. இந்தியாவின் அடிப்படை கல்வித்தரமும், மாணவர்களின் ஆங்கில கல்வித்திறனும் உயர்ந்திருப்பதால் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்களை விரும்புகின்றன.9. வெளிநாட்டு கல்விக்கு வங்கிகள் கடன் தர ஆர்வம் காட்டுகின்றன.10. சாப்ட்வேர் துறையில் இந்தியா பெற்றுள்ள வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள, சர்வதேச நிலவரம் தெரிந்த நிர்வாகிகளை நியமிக்க பெரிய நிறுவனங்கள் விரும்புகின்றன. வெளிநாட்டு கல்வியின் பயன்கள் மற்றும் எந்த நாடுகளுக்கு செல்லலாம் என்பது குறித்து அடுத்த வாரம் காண்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !