உள்ளூர் செய்திகள்

விடுதிகளில் வார்டன் பணிக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு; பிற்பட்டோர் நலத்துறை முடிவு

சிவகங்கை: தமிழகத்தில் அரசு பிற்பட்டோர் மாணவர் விடுதிகளில் வார்டன் காலி பணியிடங்களில் அரசு பள்ளி பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.மாநில அளவில் பிற்பட்டோர், சீர்மரபினர் துறையின் கீழ் 1351 பள்ளி மாணவர், மாணவிகள் விடுதி செயல்படுகின்றன. இந்த விடுதிகளில் 497 வார்டன் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.பிற்பட்டோர் நல அலுவலர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் படிக்கும் பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விடுதிகள் செயல்படுகிறது. இங்கு காலியாக உள்ள வார்டன் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் வார்டன்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் குறித்த விபரங்களை அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பெற்று, காலியாக உள்ள விடுதிகளில் வார்டன்களாக நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்