உள்ளூர் செய்திகள்

தொழில்முனைவோர் ரியாலிட்டி ேஷா: கோட்டை விட்டது அரசு நிறுவனம் கோட்டை விட்டது அரசு நிறுவனம்

சென்னை: சிறந்த தொழில் ஆலோசனைகள் சொல்பவர்களை ஊக்குவித்து, தொழில் துவங்க வைப்பதற்காக, ஸ்டார்ட் அப் தமிழா என்ற, ரியாலிட்டி நிகழ்ச்சியை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் நடத்த இருப்பதாக, 2023ல் அறிவித்தது.இதுவரை அந்நிகழ்ச்சியை துவக்காத நிலையில், தனியார், டிவி நிறுவனம், ஸ்டார்ட் அப் சிங்கம் பெயரில், அதேபோன்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. தமிழில் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சிகளில், பாட்டு, சமையல், நடனம், பேச்சு போன்றவற்றில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.சிறப்பான ஐடியாஇதில், நடுவர்கள் முன்னிலையில் போட்டியாளர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்துவர். வெற்றி பெறுவர்களுக்கு பரிசுத்தொகை, விருது வழங்கப்படுகிறது. வெளிநாட்டு, டிவி சானல்களில், புதிய தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நடுவர்களாக, தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள் இருப்பர்.அவர்கள் முன்னிலையில், இளைஞர்கள் தொழில் ஐடியாக்களை தெரிவிக்க வேண்டும். சிறப்பான ஐடியாவை ஊக்குவித்து, தொழில் துவங்க நிதி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள இளம் தலைமுறையினரில் பலருக்கு தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், வழிகாட்டுதல், முதலீடு போன்றவற்றில் பல தடைகள் உள்ளன.இழுபறிஎனவே, ஸ்டார்ட் அப் தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் வாயிலாக, இளைஞர்களுக்கு புத்தாக்க கண்டுபிடிப்பு, புத்தொழில், முதலீடு திரட்டுதல் குறித்த விழிப்புணர்வை வழங்க, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் முடிவு செய்தது.இந்நிகழ்ச்சியின் வாயிலாக, புத்தொழில் நிறுவனங்கள் முதலீட்டை ஈர்க்க உதவுவதுடன், முதலீட்டாளர்களுக்கும் புதிய தொழில் வாய்ப்பை அறியும் வாய்ப்பு ஏற்படும்.ஸ்டார்ட் அப் தமிழா நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, ஸ்டார்ட் டி.என்., நிறுவனம், 2023 இறுதியில் வெளியிட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை, அந்நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில், அதேபோன்ற நிகழ்ச்சியை, ஸ்டார்ட் அப் சிங்கம் பெயரில் தனியார் தொலைக்காட்சி நடத்த உள்ளது.இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியார் தொலைக்காட்சியுடன் இணைந்து, அதன் வாயிலாக, ஸ்டார்ட் அப் தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருந்தது. சில நிர்வாகக் காரணங்களால், நிகழ்ச்சி நடத்துவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்