உள்ளூர் செய்திகள்

பொன்னான நேரத்தை செலவிட ஏற்ற இடமாக உள்ளது கடல் தாமரை புத்தகப்பூங்கா நுாலகம் குறித்து நெகிழ்ச்சி

பெங்களூரு: “பொன்னான நேரத்தை செலவிட ஏற்ற இடமாக உள்ளது,” என்று, கடல் தாமரை புத்தகப்பூங்கா குறித்து, தினமலர் வாசகர் ராஜன் விஜயராகவன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலை தினமலர் அலுவலகத்தில் உள்ள, கடல் தாமரை புத்தகப்பூங்கா நுாலகத்திற்கு, இந்திராநகரில் வசிக்கும் ராஜன் விஜயராகவன் நேற்று வந்தார். ஆன்மிக புத்தகங்களை ஆர்வமாக எடுத்து படித்தார்.மன திருப்தி அவர் கூறியதாவது:கேரள கோவில்கள் வரலாறு, வியாச பாரதம், ராமாயண கதை கேளு, விஷ்ணு புராணம் ஆகிய ஆன்மிக புத்தகங்களை இங்கு வந்து படித்தேன். ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் புத்தகங்கள் வாசித்து உள்ளேன். நுாலக சூழல் அமைதியாக இருப்பதால் நேரம் சென்றதே தெரியவில்லை. நேரத்தை அர்த்தமுள்ளதாக போக்கவும், பொன்னான நேரத்தை செலவிடவும் ஏற்ற இடமாக, இந்த நுாலகம் அமைந்து உள்ளது. நிறைய புத்தகங்கள் கலெக் ஷன் இங்கு உள்ளன. படிக்க தான் நேரம் வேண்டும்.இங்கு உள்ள சில புத்தகங்கள் வெளியே எங்கு தேடினாலும் கிடைக்காதவை. இங்கு வந்தது மனதிற்கு திருப்தி அளிக்கிறது. இனி அடிக்கடி இங்கு வந்து புத்தகங்கள் வாசிக்க உள்ளேன். அடுத்த முறை வரும் போது மனைவி, மகனை அழைத்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.எனது பாக்கியம் ராணசிங்பேட்டையில் வசிக்கும் சண்முகமணி என்பவரும் நேற்று நுாலகத்திற்கு வந்தார்.அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., தனியாக கட்சி ஆரம்பித்த போது, தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்க வைத்ததில் தினமலர் பங்கை மறக்கவே முடியாது. முத்தாய்ப்பாக செய்திகளை வழங்கினர். இப்போது தினமலர் நுாலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள நுாலகத்தில், நான் அமர்ந்து இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்த நுாலகத்தில் அமர்ந்து புத்தகம் படிப்போருக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாது. அவ்வளவு அமைதியாக உள்ளது. இங்கு வந்து ஆன்மிக புத்தகங்களை படித்தேன்.என்னை பொறுத்தவரை புத்தகங்கள் தான் மனிதர்களின் உற்ற நண்பர். நாட்டில் உயர் பதவியில் இருக்கும் தலைவர்கள் கூட எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை புத்தகங்கள் மூலமே கற்று இருப்பர். புதுமையான புத்தகங்கள், புதிய மனிதர்களை பார்த்த திருப்தியுடன் செல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்