உள்ளூர் செய்திகள்

ஒரு லட்சம் பள்ளிகளில் குடி தண்ணீர் வசதி: மத்திய அரசு மெகா திட்டம்

குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதியில் இருந்து இந்த திட்டம் அமலாகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அக். 30ம் தேதி இரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதி அமைச்சர்  சிதம்பரம் கூறியதாவது: நாடு முழுவதும் ஒரு லட்சம் பள்ளிகளில் சுத்தமான குடி தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என, இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்திற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதி முதல், திட்டம் அமலுக்கு வரும். நடப்பு நிதியாண்டில் இதற்காக 200 கோடி ரூபாய் செலவிடப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில் நுட்பம், அதற்கான கருவிகள் விலை மற்றும் சப்ளையர்கள் போன்றவை எல்லாம் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணத்தை மத்திய அரசு வழங்கும். நவம்பர் 14ம் தேதி சில பள்ளியில் குடி தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு திட்டம் முதலில் துவக்கி வைக்கப்படும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்