உள்ளூர் செய்திகள்

இலவச பஸ் பாஸ் வழங்காததால் கெடார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதி

விழுப்புரம்: பள்ளி துவங்கி இதுவரை இலவச பஸ் பாஸ் வழங்காததால் கெடார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். விழுப்புரம் அடுத்த கெடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கக்கனூர், அரியலூர் திருக்கை, அனுமந்த புரம், அத்தியூர் திருக்கை, சிறுவாலை, அதனூர், வெங்கந்தூர் உட்பட பல கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கின்றனர். இந்த மாணவர்கள் பள்ளிக்கு அரசு டவுன் பஸ்களில் சென்று வர, ஆண்டு தோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்தாண்டு பள்ளிகள் துவங்கி ஐந்து மாதத்திற்கு மேலாகியும் கெடார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் பலருக்கு பஸ் பாஸ் வழங்கவில்லை. பஸ் பாஸ் வழங்காதவர்களுக்கு உடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்