உள்ளூர் செய்திகள்

தாங்கள் வசிக்கும் கிராமம், சமுதாயம் குறித்த ஆய்வை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்

காரைக்குடி: தாங்கள் வசிக்கும் கிராமம், சமுதாயம் குறித்த ஆய்வை, மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும், என காரைக்குடியில் நடந்த குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், "காலநிலை மற்றும் தட்ப வெப்ப நிலையை புரிந்து கொள்வோம் என்ற தலைப்பில், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. மாநில செயலாளர் நீலா பேசியதாவது: அறிவியல் ஆய்வுகளை மாணவர்கள் தங்கள் பகுதி சார்ந்த கிராமத்தை நோக்கி எடுத்து செல்ல வேண்டும். உதாரணமாக ஆற்று மணல் கொள்ளை போவதால், பாதிக்கப்படும் நீர்வளம், தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வில் ஈடுபட வேண்டும். இயற்கை தவறு செய்யாது. மனித செயல்பாடுகளால் அது மாசுபடுகிறது. குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தண்ணீருக்காக சண்டை வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும், என்றார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள், மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்