உள்ளூர் செய்திகள்

நீட் ஆய்வு தமிழக அரசின் அதிகார வரம்பை மீறிய செயல்: மத்திய அரசு

சென்னை: நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு குழுவை நியமிக்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து கூறப்படுவதாவது: நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு குழுவை நியமித்தது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணானது. நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழுவை நியமித்து இருப்பது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல். நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு குழுவை நியமிக்க இயலாது சமூக ரீதியில் பின் தங்கிய பிரிவினர்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பதை ஆராய மருத்துவ ஆணையத்துக்கு மட்டுமே உரிமை உண்டு என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.முன்னதாக நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து பா.ஜ., மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் ஒருபகுதியாக மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் அளித்துள்ள பதில் மனுவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்