உள்ளூர் செய்திகள்

தனிநபர் வருவாயை பெருக்கினால் ஏழ்மையை நீக்கலாம் - கவர்னர் ரவி பேச்சு

தேனி: தனிநபர் வருவாயை அதிகரிக்கச் செய்தால் தமிழகத்தில் ஏழ்மை நிலையை நீக்கலாம் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.தன்னம்பிக்கைமுன்னதாக, தேனியில் தனியார் பள்ளி மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து உரையாடினார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் சுய ஒழுக்கம் இருந்தால் வாய்ப்புகளை உருவாக்க முடியும். தொழில் நுட்பத்தை மாணவர்கள் தேவையான அளவிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி பயன்படுத்தினால் அது உங்களை அழித்துவிடும்.வாய்ப்புகள் உங்கள் வழியில் வரும் அதனை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்களை தயார் படுத்தி கொண்டால் வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கதை புத்தகங்களை மாணவர்கள் அதிகம் படிப்பதாக தெரிகிறது. அதில் தவறில்லை. ஆனால் உங்களை வளர்த்துக்கொள்ள மகாத்மா காந்தி குறித்த புத்தகங்கள், வாழ்வில் சாதித்தவர்கள் புத்தகங்களை படியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.ஏழ்மை நிலைதேனியில் சென்டெக்ட் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்திலேயே பின் தங்கிய மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. விவசாயத்தில் இருந்து நாட்டிற்கான பங்கீடு என்பது குறைவாகவே உள்ளது. தனிநபர் வருவாயை அதிகரிக்கச் செய்தால் தமிழகத்தில் ஏழ்மை நிலையை நீக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்