உள்ளூர் செய்திகள்

சென்னை ஐஐடி நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான திறமை- அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள்

சென்னை: சென்னை ஐஐடி-ல் உள்ள என்சிஏஹெச்டி, ஆர்2டி2 மையங்கள், ஆர் ஆர் டி நிறுவனத்துடன் இணைந்து, இன்று முதல் 3 நாட்களுக்கு திறமை- அனைவருக்கும் விளையாட்டு என்ற விளையாட்டுப் போட்டியை நடத்துகின்றன. இன்று முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வில் மொத்தம் 100 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ளனர். சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயணன் என்.கும்மாடி பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் தங்களது திறமைகளை அடையாளம் காண்பதற்கும், தகவமைப்பு விளையாட்டுகளில் எதிர்கால வாய்ப்புகளுக்கான திறமைகளை வளர்ப்பதற்கும் உதவுவதே எங்களது குறிக்கோளாகும். மேலும் உள்ளடக்கிய கல்விக்காக நிபுணர்களுடன் இணைந்து செவிப்புலன்- காட்சி- இயக்கத்திற்கான உதவித் தொழில்நுட்பங்களையும் இக்கல்விநிறுவனம் வழங்குகிறது. உளவியல் தேவைப்படும் இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவதுடன், பல்வேறு நல்வாழ்வு நடவடிக்கைகளையும் இக்கல்விநிறுவனம் மேற்கொண்டு வருகிறது, எனக் குறிப்பிட்டார்.திறமை- அனைவருக்கும் விளையாட்டு நிகழ்வுகளை 2024-25ல் மூன்று முறை நடத்தத் திட்டமிடப்பட்டு அதில் முதலாவது நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இருநிகழ்வுகள் மூன்று நாள் விளையாட்டு முகாமாக நடத்தப்படும். சக்கரநாற்காலி கூடைப்பந்து, சக்கரநாற்காலி பூப்பந்து, சக்கரநாற்காலி டென்னிஸ், சக்கரநாற்காலி கிரிக்கெட், சக்கரநாற்காலி பந்தயம், டேபிள் டென்னிஸ், எறிதல் நிகழ்வுகள் - ஈட்டி, வட்டு, குண்டு எறிதல், போசியா ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்