உள்ளூர் செய்திகள்

மும்மொழி கல்வி கற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிமை இல்லையா? முதல்வருக்கு கேள்வி

பரமக்குடி: மத்திய அரசின் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, அரசு பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி கல்வி கற்க உரிமை இல்லையா முதல்வரே? எங்களுக்கு மும்மொழி கற்க அனுமதி தாருங்கள் என, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு பள்ளி மாணவியர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த வீடியோ பரவி வருகிறது.மும்மொழி கல்வி கொள்கையில், ஹிந்தி கற்பது கட்டாயமில்லை. தங்கள் விருப்ப பாடமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை மாணவர்கள் படிக்கலாம் என, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.அதற்கு, மேலும் வலு சேர்க்கும் விதமாக பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவியர், பள்ளியில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.அதில், தமிழக முதல்வரே... அரசு பள்ளி மாணவரான எங்களுக்கு மும்மொழி கற்க உரிமை இல்லையா? ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் மும்மொழி கற்க அனுமதி கொடுங்க என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்