பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர உத்தரவு
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இணையதள சான்றிதழ் படிப்பு, உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், உயர் கல்விக்கு விண்ணப்பித்தல் என, அனைத்து செயல்பாடுகளுக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே இ - மெயில் முகவரி தேவைப்படுகிறது.இதனால், கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில், 9 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, இ - மெயில் முகவரி உருவாக்க உதவி செய்யும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.தொடர்ந்து நடப்பாண்டில், ஒன்பதாம் வகுப்பு வந்துள்ள மாணவ - மாணவியருக்கும், கடந்த ஆண்டு இ - மெயில் உருவாக்காத, 10 முதல், பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கும், பள்ளியிலேயே இ - மெயில் முகவரி உருவாக்கித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.அந்த முகவரியை, எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யவும், இ - மெயில் பயன்படுத்துவது குறித்து விளக்கத்தை கற்றுத்தரவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.