உள்ளூர் செய்திகள்

இன்று முதல் எஸ்.ஐ.ஆர்., பணி புறக்கணிப்பு; வருவாய் துறை, அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு

சென்னை: எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இன்று முதல் புறக்கணிக்க போவதாக, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. இப்பணியில் வருவாய் துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.அவசர கதி இதுதொடர்பாக வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பு:வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, உரிய திட்டமிடலின்றி, பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு எதுவும் வழங்காமல், அவசரகதியில் மேற்கொள்ள நிர்பந்தம் செய்கின்றனர்.அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களுக்கும், கடுமையான பணி நெருக்கடி, மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், ஏற்கனவே முறையீடு செய்து உள்ளோம்.அதன்பிறகும், பணி நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. சில மாவட்ட கலெக்டர்கள், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில், சார்நிலை அலுவலர்களை வதைப்பதை கைவிட வலியுறுத்தி, இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.ஓட்டுச்சாவடி அலுவலராக பணிபுரிவோர் உட்பட அனைத்து அலுவலர்களும், சங்கங்களும், இப்போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.பணி பாதிப்பு தமிழகத்தில் அங்கன்வாடி மையம், மினி மையங்கள் என, 54,000 மையங்கள் செயல்படுகின்றன. 70,000 பேர் வரை பணிபுரிகின்றனர். இவர்களில், 80 சதவீதம் பேரை தற்போது ஓட்டுச்சாவடி அலுவலராக நியமித்துள்ளனர்.ஒரே அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமைப்பாளர், உதவியாளர் ஆகிய இருவருக்கும் தேர்தல் பணி வழங்கியுள்ளனர். இதனால், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணி பாதித்துள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்குதல், பூர்த்தி செய்த படிவத்தை பெற்று, அவற்றை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்தல் போன்ற பணியை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.மதியம், 1:00 முதல் மாலை 5:00 மணி வரை தேர்தல் பணியை பார்க்க சொல்லலாம். ஆனால், காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை இப்பணியில் ஈடுபட வேண்டும் என, எங்களை வற்புறுத்துகின்றனர்.மேலும், இப்பணிக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். பூர்த்தி செய்த படிவத்தை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணியை எங்களிடமிருந்து திரும்ப பெற வேண்டும். இதுபோன்ற கோரிக்கையை வலியுறுத்தியே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை புறக்கணிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்