உள்ளூர் செய்திகள்

சீன தைபேயில் உலக திறன்கள் ஆசியப் போட்டிக்கு இந்திய அணி புறப்பட்டது

சென்னை: சீன தைபேயில் நவம்பர் 27 முதல் 29 வரை நடைபெறும் உலக திறன்கள் ஆசியப் போட்டி 2025-ல் பங்கேற்கும் இந்திய அணியை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் நேற்று வழியனுப்பி வைத்தது.இந்த போட்டியில் இந்தியா முதன்முறையாக பங்கேற்பது சிறப்பு. 40-க்கும் மேற்பட்ட ஆசிய மற்றும் விருந்தினர் நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 38 திறன் பிரிவுகளில் பங்கேற்கின்றனர். தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் தலைமையில் பங்கேற்கும் இந்திய அணியில் 23 போட்டியாளர்கள் மற்றும் 21 நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, “இந்திய இளைஞர்கள் உலகளாவிய திறன்களில் முன்னிலை வகிப்பதை இந்த பங்கேற்பு உணர்த்துகிறது. இளம் போட்டியாளர்களின் அர்ப்பணிப்பு, நீண்டகால பயிற்சி மற்றும் தொழில்துறை ஆதரவு இந்தியாவின் திறன் முன்னேற்றத்தில் முக்கிய கட்டமாகும்” என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்