உள்ளூர் செய்திகள்

ஆனைமங்கலம் செப்பேடுகள் சோழர்களின் பொக்கிஷம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: “நெதர்லாந்தில் இருந்து சோழர் காலத்து, ஆனைமங்கலம் செப்பேடுகளை மீட்டு கொண்டு வந்தது, நம் நாட்டு மக்களுக்கு பெருமிதத்தை அளித்துள்ளது. குறிப்பாக, உலகம் முழுதும் உள்ள தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், 'மன் கீ பாத்' எனப்படும், 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி வாயிலாக, நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.உற்சாகம்அந்த வகையில், நேற்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது. அங்கு நடந்த பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். அப்போது, ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதத்தில் ஆழ்த்திய ஒரு தருணம் அமைந்தது.சோழர் காலத்து செப்பேடுகளை நம் நாட்டிடம் நெதர்லாந்து அரசு திரும்ப ஒப்படைத்தது. இந்த நிகழ்வின் போது, நெதர்லாந்து பிரதமரும் உடனிருந்தார். இந்த செப்பேடுகள் குறித்து வெளிநாடுகளில் இருந்தும், நம் நாட்டில் இருந்தும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.மக்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, உலகம் முழுதும் உள்ள தமிழர்கள், சோழர் கால செப்பேடுகள் நமக்கு திரும்ப கிடைத்திருப்பதை எண்ணி உற்சாகம் அடைந்துள்ளனர்.சோழர் செப்பேடுகள் குறித்து அறிய மக்களிடையே ஆர்வம் நிலவுகிறது. எனவே, அந்த செப்பேடுகள் தொடர்பான சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மொத்தம், 24 செப்பேடுகள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அதில், 21 பெரிய செப்பு பட்டயங்களும், மூன்று சிறிய செப்பு பட்டயங்களும் இருக்கின்றன.தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் உள்ள புத்த சூடாமணி விஹாருக்கு, ஆனைமங்கலம் கிராமத்தை மாமன்னர் ராஜராஜ சோழன் தானமாக வழங்க ஆணையிட்டார்.மெய்கீர்த்திஅந்த ஆணை செப்பேடாக வடிவம் பெறுவதற்குள் ராஜராஜ சோழன் மறைந்தார். அதன்பின், அரியணை ஏறிய முதலாம் ராஜேந்திர சோழன், தந்தை கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க செப்பேடுகளை வெட்டித் தந்தார்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தை ஆண்ட முதலாம் ராஜேந்திர சோழனுடன் நேரடியாக தொடர்புடைய இந்த செப்பேடுகள், அவரது தந்தை மாமன்னர் ராஜராஜ சோழன் கொடுத்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றிய உறுதியை வெளிப்படுத்துகின்றன.சோழ மன்னர்கள், போர்களில் பெற்ற வெற்றிகள் மற்றும் சாதனைகளை விவரிக்கும், 'மெய்கீர்த்தி' இந்த செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே இருந்த ஆழமான வணிக மற்றும் துாதரக உறவுகள் பற்றியும் இந்த செப்பேடுகள் கூறுகின்றன.சோழர் காலத்தில் கடல்சார் போக்குவரத்து வலிமை எத்தனை பிரமாண்டமாக இருந்தது என்பதும் அதில் அடங்கி உள்ளன. நாட்டின் இழந்த பெருமைகளையும், வெளிநாடுகளில் இருக்கும் இது போன்ற விலை மதிப்பற்ற பாரம்பரிய சின்னங்களையும் மீட்டெடுத்து பாதுகாப்பது, நம் அரசின் தொடர்ச்சியான கடமை. இவ்வாறு அவர் கூறினார்.மனதின் குரல் நிகழ்ச்சியில், கேரளாவில் இலவசமாக நீச்சல் கற்றுக் கொடுக்கும் சாஜி வலாஷேர், உத்தர பிரதேசத்தில் கங்கை டால்பின்களை காப்பாற்றும் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் நதிகளை துாய்மைப்படுத்தும் இளைஞர்களின் சேவைகளையும் பிரதமர் மோடி பாராட்டினார்.சென்னை ஆசிரியைக்கு பாராட்டு!நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வெப்பத்தை தணிக்க உதவும் நாட்டின் பாரம்பரிய பானங்களான நீர்மோர் உள்ளிட்டவற்றை அருந்த வேண்டும். சென்னையில் ஜெய்கோபால் கரோடியா உட்பட, 15 பள்ளிகளை நடத்தி கல்விப் பணி ஆற்றி வரும் ஆசிரியை கிரிஜா அம்மாவை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.மனதின் குரல் உரையால் ஈர்க்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் மூலம் நாளொன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் சேமித்து, ராணுவ வீரர்களுக்காக, 40 லட்சம் ரூபாய் காசோலை அனுப்பிய கிரிஜா அம்மாவின் தேச பக்தியை எண்ணி, இந்த தருணத்தில் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்