உள்ளூர் செய்திகள்

ஆராய்ச்சியில்தான் ஆர்வம் அதிகம் - கூறுகிறார் ஜே.இ.இ. முதல் மாணவர்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிட்ராங் மர்டியா, இந்த 2014ம் ஆண்டு JEE - Advanced தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெற்றிருப்பதோடு, இதற்கு முந்தைய சாதனைகளையும் முறியடித்துள்ளார். தனது சாதனை தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, "நான் எலக்ட்ரானிக்ஸ் அல்லது கணிப்பொறி அறிவியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் ஆராய்ச்சியாளராக ஆக விரும்புகிறேன். படித்து முடித்து, கார்பரேட் பணிகளுக்கு செல்வதைவிட, ஆராய்ச்சிப் பணிக்கு செல்வதையே பெரிதும் விரும்புகிறேன். இந்த நாட்டில், ஆராய்ச்சிப் பணிகள் மிகவும் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதர வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, patents பதிவுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. ஆராய்ச்சிப் பணிகளின் மூலமாவே, தொழிற்சாலைகள் வளர்ச்சியடைய முடியும். அதன்மூலமே நாடு பலனடையும். ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கலை தீர்க்கும் வகையில், தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டுமென்பது எனது ஆசை. நல்ல சம்பளத்தில், கார்பரேட் பணிகளைப் பெறுவதில், எனக்கு குறைந்த ஆர்வமே உள்ளது" என்றார். இந்த மாணவர், மொத்தம் 360 மதிப்பெண்களுக்கு, 334 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் மற்றும் ஐ.ஐ.டி., மும்பையில் படிக்க விரும்புகிறார். கடந்த ஆண்டு முதல் மதிப்பெண் 332 மதிப்பெண் என்பது நினைவுகூறத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்