காந்திகிராம பல்கலையில், மாணவர்கள் ஆண்டு முழுவதும் கிராமங்களில் தங்கி கற்கும் திட்டம்
காந்திகிராமம்: மாணவர்கள் ஆண்டு முழுவதும் கிராமங்களில் தங்கி கற்கும் திட்டம் வரும் கல்வியாண்டு (2015-16) முதல் காந்திகிராம பல்கலையில் செயல்படுத்தப்பட உள்ளது. காந்திகிராம பல்கலை மாணவர்களுக்கு கிராம சூழ்நிலையுடன் கூடிய கல்வி அளிக்கப்படுகிறது. இளங்கலை மாணவர்கள் கிராமங்களில் தங்கி அங்குள்ள சூழ்நிலையை அறிந்துகொள்ள, 2015-16ல் ஆண்டு முழுவதும் கிராமங்களில் தங்கி கற்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இளங்கலை பிரிவு மாணவர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து ஒவ்வொரு மாதமும் தலா ஒரு வாரம் வீதம் கிராமத்தில் தங்குவர். இதனால் கிராம மக்களின் வாழ்க்கை நிலை, பிரச்னைகள், அரசின் திட்டங்களை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். கிராமங்களை மேம்படுத்தும் வகையில் நாட்டு நலப்பணிகளும் மேற்கொள்வர். துணைவேந்தர் நடராஜன்: இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்கள் உள்ளன. அவற்றின் நிலையை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மாணவர்கள் கிராமங்களுக்கு செல்கின்றனர். புதிய திட்டத்தில் மாணவர்கள் ஆண்டு முழுவதும் கிராமங்களில் தங்குவர், என்றார்.