உள்ளூர் செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்க்கை இறுதி செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

கோவையை சேர்ந்த, டாக்டர் எஸ்.அரவிந்த் தாக்கல் செய்த மனுவில், &'முதுநிலை மருத்துவ படிப்பில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்தாமல், மாணவர்கள் சேர்க்கையை முடிக்கக் கூடாது. &'இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கையை முடிக்க, உத்தரவிட வேண்டும்&' என, கூறப்பட்டுள்ளது. டாக்டர் கீதாஞ்சலி என்பவரும், மனு தாக்கல் செய்திருந்தார்.இம்மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:கவுன்சிலிங் அவகாசத்தை நீட்டிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்ய, அட்வகேட் ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாணவர்கள் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என, கல்லுாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவகாசம் நீட்டிக்க கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்ற உத்தரவை, நீதிபதி நீக்கினார்.மாணவர்களின் பட்டியலை மருத்துவ கவுன்சிலிடம் சமர்பிக்க, வரும், 25ம் தேதி வரை, அரசுக்கு அவகாசம் வழங்கினார். அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் தன்னை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு, தனியார் கல்லுாரியில் இடம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் என, மாணவி சார்பில், வழக்கறிஞர் தங்கசிவன் முறையிட்டார். இதற்கு, சம்பந்தப்பட்ட கல்லுாரி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 24ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்